விமானத்தில் மறந்தும் கூட இந்த பொருட்களை எடுத்துட்டு போகாதீங்க.. குறிப்பா இந்த பழம்.. எது தெரியுமா?

Published : Aug 12, 2024, 08:44 AM ISTUpdated : Aug 12, 2024, 09:41 AM IST

விமான பயணிகள் இந்த பழத்தை விமானத்தில் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பிடிபட்டால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

PREV
14
விமானத்தில் மறந்தும் கூட இந்த பொருட்களை எடுத்துட்டு போகாதீங்க.. குறிப்பா இந்த பழம்.. எது தெரியுமா?
Airport rules and regulations

உள்நாட்டு அல்லது வெளிநாட்டு விமானங்களில், மீன், இறைச்சி, ஊறுகாய் ஆகியவை தடைசெய்யப்பட்டுள்ளன. சர்வதேச விமானப் போக்குவரத்துக் கழகம் விமானப் பயணத்திற்கு ஆபத்தான பல பொருட்களை அறிவித்துள்ளது. அவர்களை விமானத்தில் ஏற்றிச் செல்ல முயன்றால் விமான நிலைய அதிகாரிகளின் தொல்லைகளை பயணிகள் சந்திக்க வேண்டியுள்ளது.

24
Air Passengers

தடைப்பட்டியலில் மீன், இறைச்சி, ஊறுகாய் என அனைத்தும் அடங்கும். பழமும் உண்டு. தேங்காயை முழுவதுமாகவோ அல்லது உலர்ந்ததாகவோ விமானத்தில் எடுத்துச் செல்ல முயற்சிக்காதீர்கள். ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு அல்லது ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு பயணம் செய்யும் போது, ​​பயணிகள் பெரும்பாலும் பிரசாதத்தை எடுத்துச் செல்கிறார்கள். காய்ந்த தேங்காய் இருந்தால், விமான நிறுவனத்தால் தடுக்க முடியும்.

34
Flights

விமான நிறுவனத்தின் கூற்றுப்படி, உலர்ந்த தேங்காய் எரியக்கூடியது. தேங்காய் எண்ணெய் காரணமாக, இது எரியக்கூடிய எண்ணெய் என்று பட்டியலிடப்பட்டுள்ளது. இதன் விளைவாக, ஆபத்தைத் தவிர்க்க செக்-இன் அல்லது கேபின் பைகளில் தேங்காய் அனுமதிக்கப்படுவதில்லை. விமானத்தில் கேரி-ஆன் பேக்கேஜில் கொண்டு செல்ல முடியாத பொருட்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.

44
Travel

கைத்துப்பாக்கிகள், ஏதேனும் துப்பாக்கி (உரிமம் பெற்றிருந்தாலும் கூட) ஆணிகள், கத்திகள், மீன், இறைச்சி, பென்சில் பேட்டரிகள், தீப்பெட்டிகள், லைட்டர்கள். இடுக்கி, கத்தரிக்கோல், கத்திகள், குச்சிகள் - சிரிஞ்ச்கள், ஸ்க்ரூடிரைவர்கள், முட்கரண்டிகள், மிளகாய் தூள், ஷேவிங் ஃபோம், கிரிக்கெட் மட்டைகள் போன்றவை இப்பட்டியலில் அடங்கும்.

தினமும் 2.5 ஜிபி டேட்டா.. இந்தியர்கள் எல்லாரும் வாங்குவாங்க.. முகேஷ் அம்பானி கொடுத்த சர்ப்ரைஸ் கிஃப்ட்!

Read more Photos on
click me!

Recommended Stories