Ration Card: ரேஷன் அட்டையுடன் ஆதாரை இணைக்காவிட்டால் உதவித்தொகை நிறுத்தம்! அத்தனை சலுகைகளும் ரத்தாகுமா?

Published : Aug 18, 2026, 08:20 AM IST

ரேஷன் அட்டையுடன் ஆதார் இணைப்பு மற்றும் e-KYC சரிபார்ப்பை முடிக்காத பயனாளிகளுக்கு அரசு உதவித்தொகை பெறுவதில் சிக்கல் ஏற்படலாம் என முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரேஷன் அட்டைதாரர்கள் உடனடியாக இதனை செய்ய வேண்டியது கட்டாயம்.!

PREV
16
புது ரூல்ஸ்.! கண்டிப்பா தெரிஞ்சுக்கனும்.!

அரசின் நலத்திட்ட உதவிகள் மற்றும் மானியங்கள் தகுதியான நபர்களுக்கு மட்டுமே சென்று சேருவதை உறுதிசெய்யும் வகையில், ரேஷன் அட்டையுடன் ஆதாரை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகள் போலி ரேஷன் கார்டுகளை ஒழிக்கவும், முறைகேடுகளைத் தடுக்கவும் இத்தகைய கண்டிப்பான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி வருகின்றன. ஆனால் இப்போது ரேஷன் கார்டுடன் ஆதாரை இணைக்காவிட்டால் உதவிதொகை ரத்து என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

26
சலுகைகள் நிறுத்தப்படுமா?

ரேஷன் அட்டையுடன் ஆதாரை இணைக்காத அல்லது e-KYC சரிபார்ப்பை பூர்த்தி செய்யாத குடும்ப அட்டைகளுக்கு வழங்கும் அரிசி, பருப்பு உள்ளிட்ட இலவச/மானிய விலைப் பொருட்கள் வழங்கும் சேவை தற்காலிகமாக நிறுத்தப்படும் அபாயம் உள்ளது. மேலும், புதுச்சேரி போன்ற யூனியன் பிரதேசங்களில் செயல்படுத்தப்படும் நேரடி பணப் பரிமாற்றம் (DBT) மற்றும் டிஜிட்டல் நாணய (CBDC) மூலமான உணவு மானிய உதவிகளும் தடையின்றி கிடைக்க ஆதார் இணைப்பு அவசியமாகிறது.

36
அரசின் நோக்கம் மற்றும் பயன்கள்
  • போலி அட்டைகள் நீக்கம்: இறந்துபோன நபர்கள், முகவரி மாறியவர்கள் மற்றும் ஒரே நபர் பல இடங்களில் வைத்துள்ள போலி அட்டைகளைக் கண்டறிந்து நீக்குதல்.
  • வெளிப்படைத்தன்மை: தகுதியான ஏழை எளிய மக்களுக்கு மட்டுமே அரசின் நிதி மற்றும் பொருட்கள் சென்றடைவதை உறுதி செய்தல்.
  • சலுகைகள் பாதுகாப்பு: தகுதியுள்ள உண்மையான பயனாளிகளின் உரிமைகள் மற்றும் மானியங்களைப் பாதுகாத்தல்.
46
உடனடியாக செய்ய வேண்டியது

பொதுமக்கள் தங்களின் பகுதிக்கு அருகிலுள்ள பொது சேவை மையங்கள் (CSC) அல்லது ரேஷன் கடைகளுக்கு நேரில் சென்று, குடும்ப அட்டையில் உள்ள அனைத்து உறுப்பினர்களின் ஆதார் எண்ணையும் e-KYC (கைரேகை அல்லது விழித்திரை சரிபார்ப்பு) மூலம் இலவசமாக இணைக்க வேண்டும்.

குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் ஆதாரை இணைப்பதன் மூலம் ரேஷன் பொருட்களையும், அரசு வழங்கும் அனைத்து நிதி உதவித்தொகைகளையும் எவ்வித தடையுமின்றித் தொடர்ந்து பெற முடியும்.

56
பொதுமக்களுக்கான முக்கிய அறிவுறுத்தல்கள்
  • ரேஷன் கார்டில் பெயர் இடம்பெற்றுள்ள குடும்பத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் தங்களின் e-KYC சரிபார்ப்பை தனித்தனியாகப் பூர்த்தி செய்ய வேண்டும்.
  • ஏற்கனவே e-KYC பதிவை வெற்றிகரமாக முடித்த பயனாளிகள் மீண்டும் செய்ய வேண்டிய அவசியமில்லை.
  • குடும்ப அட்டையில் பெயர் உள்ளவர்கள் உடனே அருகிலுள்ள பொது சேவை மையத்திற்குச் சென்று கைரேகை பதிவு செய்து தங்களது விவரங்களை புதுப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
  • அரசின் நலத்திட்ட உதவிகள் தடையின்றித் தொடர்ந்து கிடைக்க, புதுச்சேரி பொதுமக்கள் தாமதிக்காமல் இந்த e-KYC நடைமுறையை உடனடியாக முடிக்குமாறு அரசால் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
66
அப்படியானால் உடனே செஞ்சுடுங்க மக்களே.!

CBDC (மத்திய வங்கி டிஜிட்டல் நாணயம்) திட்டமும் e-KYC-யும் புதுச்சேரியில் ரேஷன் பொருட்களுக்கு நேரடி பணப் பரிமாற்ற (DBT-Cash) முறைக்கு மாற்றாக, ரிசர்வ் வங்கியின் டிஜிட்டல் நாணயம் (CBDC - e₹) அடிப்படையிலான உணவு மானிய விநியோக முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பிரதமரின் ஏழைகள் நல அன்ன யோஜனா (PMGKAY) திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு 3 மாத கால அவகாசம் கொண்ட டிஜிட்டல் வாலட் (e-wallet) தொகையாக மானியம் வழங்கப்படுகிறது. இந்த டிஜிட்டல் சலுகையையும் அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்களையும் பெறுவதற்கு e-KYC பதிவு முற்றிலும் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. e-KYC முடிக்காத நபர்களுக்கு டிஜிட்டல் மானியம் நிறுத்தி வைக்கப்படலாம்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories