Sukanya Samriddhi Yojana: உங்களுக்கு மகள் பிறந்திருக்கிறாரா? உங்கள் செல்ல மகளுக்காக நீங்கள் தினமும் ரூ.250 சேமித்தால் சொளையாக ரூ.40 லட்சம் கையில் கிடைக்கும். இந்த செல்வமகள் சேமிப்பு திட்டம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
அனைத்து பெற்றோர்களுக்கும் தங்கள் பெண் பிள்ளைகளின் படிப்பு, உயர்கல்வி மற்றும் திருமணம் பற்றிய ஒரு பெரிய கவலை இருக்கும். எதிர்காலத்தில் திடீரென ஒரு பெரிய தொகையை ஏற்பாடு செய்வது மிகவும் கடினம். ஆனால், இன்றிலிருந்தே சிறிய தொகையை சேமிக்கத் தொடங்கினால், மகள் வளர்ந்து பெரியவளாகும்போது ஒரு பெரிய நிதியை உருவாக்க முடியும்.
இதற்காக மத்திய அரசு கொண்டு வந்துள்ள மிகவும் பிரபலமான மற்றும் பாதுகாப்பான திட்டம்தான் செல்வமகள் சேமிப்பு திட்டம் என அழைக்கப்படும் 'சுகன்யா சம்ரிதி யோஜனா'. இந்தத் திட்டத்தில் எப்படி முதலீடு செய்வது, வட்டி விகிதம் எவ்வளவு மற்றும் ரூ.40 லட்சம் நிதி எப்படி கிடைக்கும் என்பதற்கான முழுமையான விவரங்கள் இதோ.
25
செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் கணக்கு தொடங்க தகுதி
வயது வரம்பு: பெண் குழந்தைக்கு 10 வயது ஆவதற்குள், பெற்றோர் அல்லது பாதுகாவலர் குழந்தையின் பெயரில் இந்தக் கணக்கைத் திறக்கலாம்.
குழந்தைகளின் எண்ணிக்கை: பொதுவாக, ஒரு குடும்பத்தில் இரண்டு பெண் குழந்தைகளுக்கு மட்டுமே இந்தக் கணக்கைத் திறக்க முடியும். ஆனால், இரட்டை அல்லது மூன்று குழந்தைகள் (ஒரே பிரசவத்தில் பிறந்தால், சிறப்பு விதிகளின் கீழ் இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கும் கணக்கு தொடங்க அனுமதிக்கப்படும்.
கணக்கு தொடங்கும் இடம்: உங்கள் அருகில் உள்ள தபால் நிலையம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளில் இந்தக் கணக்கைத் தொடங்கலாம்.
35
முதலீட்டு அளவு மற்றும் வட்டி விகிதம்
குறைந்தபட்ச & அதிகபட்ச முதலீடு: இந்தத் திட்டத்தில் ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் ₹250 கட்டினால் போதும். அதிகபட்சமாக ஆண்டுக்கு ₹1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம்.
அதிக வட்டி: தற்போது இந்தத் திட்டத்திற்கு அரசாங்கம் ஆண்டுக்கு 8.2% என்ற மிக அதிக வட்டியை வழங்குகிறது. (குறிப்பு: இந்த வட்டி விகிதங்களை அரசு ஒவ்வொரு காலாண்டுக்கும் ஒருமுறை மதிப்பாய்வு செய்து மாற்றியமைக்கும்).
தினமும் ரூ.250 சேமித்தால் ரூ.40 லட்சம் கிடைப்பது எப்படி?
கணக்கீடு மிகவும் எளிது
1. நீங்கள் இந்தத் திட்டத்தில் ஒரு நாளைக்கு ரூ.250 வீதம் சேமித்தால், ஒரு வருடத்திற்கு மொத்தம் ரூ.91,250 முதலீடு செய்வீர்கள்.
2. விதிகளின்படி, நீங்கள் இந்தத் தொகையை 15 ஆண்டுகளுக்கு செலுத்த வேண்டும். அப்போது உங்கள் மொத்த முதலீடு ரூ.13,68,750 ஆக இருக்கும்.
3. தற்போதைய 8.2% வட்டி விகிதம் தொடர்ந்தால், குழந்தைக்கு 21 வயது ஆகும்போது (முதிர்வு காலம்) உங்கள் கைக்குக் கிடைக்கும் மொத்தத் தொகை சுமார் ரூ.40.4 லட்சம் (ரூ.40,40,000)
55
பணம் எடுக்கும் முறை மற்றும் வரி விலக்கு
21 வருட முதிர்வு: கணக்கு தொடங்கிய நாளிலிருந்து 21 ஆண்டுகள் முடிந்ததும் இந்தத் திட்டம் முழுமையாக முதிர்ச்சியடையும்.
கல்விக்காக 50% பணம்: மகளுக்கு 18 வயது நிரம்பிய பிறகு, அவரது உயர்கல்விச் செலவுகளுக்காக கணக்கில் உள்ள மொத்தத் தொகையில் 50% பணத்தை எடுத்துக்கொள்ளும் வசதி உள்ளது.
வரி விலக்கு (Tax Free): இது 'EEE' (Exempt-Exempt-Exempt) வகையைச் சேர்ந்தது. வருமான வரிச் சட்டம் பிரிவு 80C-யின் கீழ், ஆண்டுக்கு ரூ.1.5 லட்சம் வரையிலான முதலீட்டிற்கு வரி விலக்கு உண்டு.
அதுமட்டுமின்றி, இந்தத் திட்டத்தில் கிடைக்கும் வட்டி மற்றும் இறுதியில் கிடைக்கும் ரூ.40 லட்சம் முதிர்வுத் தொகைக்கும் எந்த வரியும் கிடையாது. தங்கள் மகளின் எதிர்காலத்திற்காக மிகவும் பாதுகாப்பான மற்றும் உத்தரவா
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.