8th Pay Commission: குறைந்தபட்ச பென்ஷன் ரூ.45,000? 8வது ஊதியக் குழுவின் லேட்டஸ்ட் அப்டேட்!

Published : Aug 31, 2026, 01:10 PM IST

8th Pay Commission Update: 8வது ஊதியக் குழு பற்றி ஒரு புதிய விவாதம் கிளம்பியுள்ளது. குறைந்தபட்ச பென்ஷனை ரூ.9,000-லிருந்து ரூ.45,000 ஆக உயர்த்தப்படுகிறதா? எப்போது முதல் இந்த ஊதிய உயர்வு கிடைக்கும்? முழு விவரம் உள்ளே.

PREV
16
ஒரு புதிய சர்ப்ரைஸ் செய்தி

ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு புதிய சர்ப்ரைஸ் செய்தி வந்துள்ளது. இனி குறைந்தபட்ச பென்ஷன் ரூ.45,000 ஆக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. 8வது ஊதியக் குழு பற்றி ஒரு புதிய விவாதம் தொடங்கியுள்ளது. இப்போது மேலும் பல ஆச்சரியமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

26
ஃபிட்மென்ட் ஃபாக்டர் - மாறுபடுகிறதா?
8வது ஊதியக் குழு நீண்ட நாட்களாகவே செய்திகளில் அடிபடுகிறது. இந்த கமிஷன் அறிவிக்கப்பட்டதிலிருந்து, இதுபற்றி பல விவாதங்கள் நடந்து வருகின்றன. புதிய ஊதியக் குழு அமலுக்கு வந்தால், ஊழியர்களின் சம்பளம், பென்ஷன், படிகள் திருத்தம் தொடர்பாக ஊழியர் சங்கங்கள் பல கோரிக்கைகளை மத்திய அரசிடம் வைத்துள்ளன. அதில் முக்கியமானது ஃபிட்மென்ட் ஃபாக்டர். இந்த ஃபிட்மென்ட் ஃபாக்டர் பற்றி ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது.
36
ஊழியர் சங்கங்கள் கோரிக்கை
ஊழியர்களின் சம்பளம் அல்லது ஓய்வு பெற்றவர்களின் பென்ஷன் மற்றும் படிகள் எவ்வளவு உயரும் என்பதை ஃபிட்மென்ட் ஃபாக்டர்தான் தீர்மானிக்கிறது. இப்போது, ஃபிட்மென்ட் ஃபாக்டரை 3.83 ஆக உயர்த்த வேண்டும் என ஊழியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
46
வரப்போகிறது ஒரு நல்ல செய்தி
நாட்டின் 50.14 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 69 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு நல்ல செய்தி வரப்போகிறது. 8வது ஊதியக் குழு ஜனவரி 1, 2026 முதல் அமலுக்கு வரும். நிலுவைத் தொகையும் முழுமையாகக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம்.
56
குறைந்தபட்ச பென்ஷன்ரூ.45,000 ஆக உயரும்

சமீபத்திய அறிக்கையின்படி, 8வது ஊதியக் குழு அமல்படுத்தப்பட்டால், குறைந்தபட்ச பென்ஷன் ரூ.45,000 ஆக உயரும். அதாவது, குறைந்தபட்ச பென்ஷனை ரூ.9,000-லிருந்து ரூ.45,000 ஆக உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இதனுடன், அகவிலைப்படி (DA) மற்றும் அகவிலை நிவாரண (DR) நிலுவைத் தொகைகள், கேஷ்லெஸ் மருத்துவ சிகிச்சை, மருத்துவப் படி போன்ற பல கோரிக்கைகளையும் சங்கங்கள் முன்வைத்துள்ளன.

66
பதிலுக்காக காத்திருக்கும் அரசு ஊழியர்கள்
ஆனால், இதெல்லாம் வெறும் கோரிக்கைகள்தான். அரசு தரப்பிலிருந்து இதுவரை எந்த உறுதியான தகவலும் வரவில்லை. அதேபோல, இதுகுறித்து எந்த அறிவிப்பையும் அரசு வெளியிடவில்லை. அதனால், இந்த விஷயம் இப்போதைக்கு ஒரு குழப்பத்தில்தான் இருக்கிறது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories