8-வது ஊதியக் குழு, மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தை ஆய்வு செய்ய சீனியர் கன்சல்டன்ட், கன்சல்டன்ட், மற்றும் யங் புரொஃபஷனல் பதவிகளுக்கு நிபுணர்களைத் தேர்வு செய்கிறது. எழுத்துத் தேர்வு இல்லாமல், நேர்காணல் மூலம் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்கள்.
அரசு வேலை தேடுறீங்களா? நல்ல சம்பளமும் வேணுமா? அப்போ இந்த நியூஸ் உங்களுக்குத்தான். 8-வது ஊதியக் குழுவில் (Pay Commission) வேலை செய்ய ஒரு சூப்பர் வாய்ப்பு வந்திருக்கு. மாசத்துக்கு வெறும் 6 நாள் வேலை பார்த்தா போதும், கை நிறைய சம்பாதிக்கலாம். ஏப்ரல் 10, 2026 தேதியிட்ட அரசாணைப்படி, மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம், படிகளை ஆய்வு செய்ய நிபுணர்கள் தேவை. அனுபவம், வயது அடிப்படையில் மூன்று பிரிவுகளில் ஆட்களைத் தேர்ந்தெடுக்கிறாங்க. உங்க வயது 32-லிருந்து 45-க்குள் இருந்தால், தகுதிக்கு ஏற்ப விண்ணப்பிக்கலாம்.
25
என்னென்ன பதவிகள் காலியாக உள்ளன?
8-வது ஊதியக் குழுவில் சீனியர் கன்சல்டன்ட், கன்சல்டன்ட், யங் புரொஃபஷனல் பதவிகள் காலியாக இருக்கு. சீனியர் கன்சல்டன்ட் பதவிக்கு 10 வருஷ அனுபவம், அதிகபட்ச வயது 45. கன்சல்டன்ட் பதவிக்கு 6 வருஷ அனுபவம், அதிகபட்ச வயது 40. யங் புரொஃபஷனல் பதவிக்கு 4 வருஷ அனுபவம், அதிகபட்ச வயது 32. வயது மற்றும் அனுபவத்தை ஏப்ரல் 1, 2026 தேதியை வைத்து கணக்கிடுவாங்க.
35
சம்பளம் எவ்வளவு இருக்கும்?
இந்த வேலையில் சம்பளம் ரொம்பவே சூப்பரா இருக்கு. முழு நேரம் (Full-time) அல்லது பகுதி நேரம் (Part-time) ஆப்ஷனை தேர்ந்தெடுக்கலாம். சீனியர் கன்சல்டன்ட் முழு நேர வேலைக்கு மாதம் ₹1,80,000 சம்பளம். மாதம் 12 நாள் வேலைக்கு ₹90,000, 6 நாள் வேலைக்கு ₹45,000 கிடைக்கும். கன்சல்டன்ட் முழு நேர சம்பளம் ₹1,20,000. பகுதி நேரத்துக்கு முறையே ₹60,000 (12 நாட்கள்), ₹30,000 (6 நாட்கள்). யங் புரொஃபஷனல்ஸுக்கு முழு நேரத்துக்கு ₹90,000, 12 நாட்களுக்கு ₹45,000, 6 நாட்களுக்கு ₹22,500 கொடுப்பாங்க.
இந்தப் பதவிகளுக்கு நீங்க எந்த எழுத்துத் தேர்வும் எழுதத் தேவையில்லை. கமிஷனில் உள்ள மூத்த அதிகாரிகள் குழு உங்க விண்ணப்பத்தை பரிசீலனை செய்யும். தகுதியானவங்களை நேரடியா நேர்காணலுக்கு கூப்பிடுவாங்க. இந்த கமிட்டியின் முடிவுதான் இறுதியானது. இது ஒரு ஒப்பந்த வேலைதான், நிரந்தரமானது இல்லை என்பதை நினைவில் கொள்ளவும். தேர்ந்தெடுக்கப்படும் புரொஃபஷனல்கள் 8-வது ஊதியக் குழுவுக்கு உதவ வேண்டும். ஊழியர்களின் சம்பள கட்டமைப்பை பகுப்பாய்வு செய்வது, பழைய டேட்டாவை படிப்பது, சட்டரீதியான விஷயங்களை ஆராய்வது, பல்வேறு அமைச்சகங்களிடமிருந்து டேட்டாவை சேகரிப்பது போன்ற வேலைகள் இருக்கும்.
55
மற்ற சலுகைகள் என்ன?
அதாவது, எதிர்காலத்தில் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தை எவ்வளவு உயர்த்துவது என்பதை முடிவு செய்ய நீங்க உதவுவீங்க. இந்த வேலையில் சம்பளத்தைத் தவிர வேறு எந்தப் படிகளும் கிடையாது. அகவிலைப்படி (DA), வீட்டு வாடகைப்படி (HRA), மருத்துவச் செலவுகள், போன் பில் போன்ற எதுவும் கொடுக்க மாட்டாங்க. கமிஷன் அலுவலகத்தில் வேலை செய்ய இடம் மட்டும் கொடுப்பாங்க. லேப்டாப், போன் போன்றவற்றை நீங்களே ஏற்பாடு செஞ்சுக்கணும். உங்க வேலைத்திறன் சரியில்லைன்னாலோ, ஒழுக்கத்தை மீறினாலோ, எந்த முன் அறிவிப்பும் இல்லாம கமிஷன் உங்களை வேலையிலிருந்து நீக்கிவிடலாம். ரிசர்ச், டேட்டா அனாலிசிஸ்ல அனுபவம் இருந்தா, அதிகாரப்பூர்வ இணையதளத்துக்குப் போய் உடனே அப்ளை பண்ணுங்க.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.