எல்.ஐ.சி (LIC) நிறுவனம் அக். 19 முதல் வரவுள்ள 'நியூ ஜீவன் தாரா-II', 'ஹெல்த் ஷீல்ட்' மற்றும் 'கேன்சர் கவர்' ஆகிய 3 புதிய பங்குச்சந்தை சாராத பாலிசிகளின் விவரங்களை வெளியிட்டுள்ளது.
இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (LIC) தனது வாடிக்கையாளர்களுக்காக மூன்று புதிய திட்டங்களை அறிமுகப்படுத்த இருக்கின்றது. அக். 19 ஆம் தேதி முதல் இந்தத் திட்டங்கள் விற்பனைக்கு வரவுள்ளன.
இந்த 3 திட்டங்களும் பங்குச்சந்தை சாராத (Non-Linked) மற்றும் லாபப் பகிர்வு இல்லாத (Non-Participating) திட்டங்களாகும். எனவே, இத்திட்டங்களில் முதலீடு செய்யப்படும் பணம் பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்படாது. அதுமட்டுமல்லாமல், இவற்றின் வருமானம் என்பது எல்.ஐ.சி.யின் போனஸ் அறிவிப்புகளைச் சார்ந்தும் இருக்காது. பாலிசி எடுக்கும்போதே உங்களுக்கான நன்மைகள் மற்றும் உத்தரவாத பலன்கள் அனைத்தும் முடிவு செய்யப்படும். அந்த 3 திட்டங்கள் குறித்து விரிவாக பார்போம்.
24
எல்.ஐ.சி. நியூ ஜீவன் தாரா-II (Plan 892)
இது ஒரு ஆயுட்கால உத்தரவாத ஓய்வூதியத் திட்டமாகும் (Deferred Annuity Plan). இதில் நீங்கள் குறிப்பிட்ட காலம் வரை பிரீமியம் செலுத்த வேண்டும். அதன்பின் ஒத்திவைப்புக் காலம் (Deferment Period) முடிந்த பிறகு, வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு உத்தரவாதமான ஓய்வூதியம் வழங்கப்படும்.
பிரீமியம் செலுத்தும் முறை - இதில் ஒரே முறையில் மொத்தமாகவோ (Single Premium) அல்லது வழக்கமான தவணைகளிலோ (Regular Premium) பிரீமியம் செலுத்தலாம். உங்களுக்கு மட்டும் (Single Life) அல்லது தம்பதியருக்கான (Joint Life) ஓய்வூதியத் தேர்வைத் தேர்ந்தெடுக்கலாம்.
டாப்-அப் வசதி - இத்திட்டத்தில் டாப்-அப் வசதியும் உண்டு. அதாவது, ஒத்திவைப்புக் காலத்தில் கூடுதல் பிரீமியம் செலுத்தி ஓய்வூதியத் தொகையை அதிகரிக்கும் வசதியும் இதில் வழங்கப்பட்டுள்ளது.
34
எல்.ஐ.சி. ஹெல்த் ஷீல்ட் (Plan 907)
இது ஒரு நிலையான நன்மைகளை வழங்கும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டமாகும் (Fixed Benefit Health Plan).
நிலையான தொகை - வழக்கமான இன்சூரன்ஸ் போல மருத்துவமனை பில்களுக்குத் தகுந்தவாறு பணம் தராமல், இத்திட்டம் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட நிலையான தொகையை வழங்கும்.
மருத்துவமனை உதவித் தொகை - மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்படும் ஒவ்வொரு நாளுக்கும் நிலையான தொகை (Daily Hospital Cash Benefit) கிடைக்கும். பெரிய சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைகளுக்கான செலவுகளை ஒரே தவணையாக (Lump-sum payout) வழங்கும். குடும்பக் காப்பீடு - இந்த ஒரே பாலிசியின் மூலம் குடும்பம் முழுவதும் பயன் பெறலாம்.
எல்.ஐ.சி.யின் இந்த கேன்சர் கவர் (Plan 908) திட்டம் என்பது ஆரம்பகட்ட புற்றுநோய் அல்லது தீவிரமான புற்றுநோய் சிகிச்சைக்கான நிதிப் பாதுகாப்பை வழங்குகின்றது.
உடனடி நிதி உதவி - புற்றுநோய் கண்டறியப்பட்டவுடன், நீங்கள் தேர்ந்தெடுத்த காப்பீட்டுத் தொகையில் (Sum Assured) ஒரு குறிப்பிட்ட தொகை உடனே வழங்கப்படும்.
மாதாந்திர வருமானம் - தீவிரமான புற்றுநோய் கண்டறியப்பட்டால், அடுத்த சில ஆண்டுகளுக்கு நிலையான மாதாந்திர வருமானமும் வழங்கப்படும்.
பிரீமியம் தள்ளுபடி- தீவிரமான புற்றுநோய் கட்டத்திற்குப் பிறகு, செலுத்த வேண்டிய மற்ற அனைத்து எதிர்காலப் பிரீமியங்களும் தள்ளுபடி செய்யப்படும்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.