சொந்த வீடு வாங்க போறீங்களா? தேங்கிக் கிடக்கும் 6 லட்சத்திற்கும் அதிகமான வீடுகள்; இந்த தீபாவளி தரும் பொன்னான வாய்ப்பு!

Published : Oct 15, 2026, 01:35 PM IST

இந்தியாவில் வீடுகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலில், ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் இந்த தீபாவளி பண்டிகைக் காலத்தில் பெரிய அளவிலான தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளை வழங்கத் திட்டமிட்டுள்ளன.

PREV
15
சொந்த வீடு வாங்குவதற்கு எது சரியான நேரம்?

இந்தியாவில் பண்டிகை காலம் தொடங்கிவிட்டாலே கொண்டாட்டங்களுடன், வர்த்தக துறையும் குதுகலமாகிவிடும். அந்த வகையில் இந்த ஆண்டு பண்டிகை காலம் என்பது ரியல் எஸ்டேட் துறைக்குப் பொற்காலமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாகப் புதிதாக வீடு வாங்கத் திட்டமிடுவோருக்கு இந்த பண்டிகை காலத்தில் அதிகப்படியான தள்ளுபடியுடன் வீடு வாங்கும் சூழல் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

25
ரியல் எஸ்டேட் சந்தையின் தற்போதைய நிலை

தற்போது ரியல் எஸ்டேட் சந்தையில் இருக்கும் முக்கியமான பிரச்சனை என்னவென்றால், சந்தையில் வீடுகள் விற்பனை செய்யப்படுவதை விடவும், சந்தையில் அறிமுகம் செய்யப்படும் புதிய வீடுகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதால், விற்பனை ஆகாமல் பல லட்சம் வீடுகள் கிடப்பில் உள்ளன.

இதனால் புதிய திட்டங்களின் அறிமுகமும், கட்டுமானமும் தொய்வடைந்து வருகிறது. இதன் காரணமாக ரியல் எஸ்டேட் நிறுவனங்களும், பில்டர்களும் விற்பனை ஆகாமல் தேங்கிக் கிடக்கும் வீடுகளை வேகமாக விற்பனை செய்ய இந்த பண்டிகை காலத்தை முக்கியமான இலக்காக வைத்துள்ளனர்.

35
தேங்கிக் கிடக்கும் வீடுகளின் அதிகரிப்பு

இந்தியாவில் சென்னை, மும்பை, பெங்களூர், ஹைதராபாத் என முக்கிய மெட்ரோ நகரங்களில் விற்பனை செய்யப்படாமல் தேங்கிக் கிடக்கும் வீடுகளின் எண்ணிக்கை, இந்த வருடச் செப்டம்பர் காலாண்டின் இறுதியில் 12% அதிகரித்து 6.31 லட்சம் வீடுகளாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இது 5.62 லட்சம் வீடுகளாக மட்டுமே இருந்தது.

ஆனால், செப்டம்பர் காலாண்டில் ஒரு முக்கியமான மாற்றம் நடந்துள்ளது. இக்காலாண்டில் புதிதாகக் கட்டப்பட்ட வீடுகளின் விற்பனையோ 3% மட்டுமே உயர்ந்து 1,00,220 வீடுகள் மட்டுமே விற்கப்பட்ட நிலையில், புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட வீடுகளின் அளவு 18% அதிகரித்து 1.14 லட்சம் வீடுகள் சந்தைக்கு வந்துள்ளது. இதனால் தேக்கமடைந்த வீடுகளின் எண்ணிக்கை பெரிய அளவில் அதிகரித்துள்ளது.

45
வீடுகள் விற்பனை தேக்கமடையக் காரணம் என்ன?

விலை உயர்வு - இந்தியாவில் புதிய வீடுகளின் விற்பனை தேக்கமடைய முக்கியமான காரணம், வீடுகளின் விலை தாறுமாறாக உயர்ந்திருப்பதுதான். உதாரணமாகப் பெங்களூரில் 2 ஆண்டுகளுக்கு முன்பு 2 BHK வீடுகள் ரூ.40-75 லட்சத்திற்கு விற்கப்பட்டு வந்தன. ஆனால், தற்போது இதன் விலை ரூ.1 கோடிக்கும் அதிகமாகியுள்ளது. இதேபோல் சென்னை, மும்பை, ஹைதராபாத் என நாட்டின் அனைத்து நகரங்களிலும் இதே நிலைதான் நிலவுகிறது. இதனால் சொந்த வீடு வாங்கத் திட்டமிடும் சாமானிய மக்கள் தங்களுடைய முடிவைத் தள்ளிப்போட்டுள்ளனர்.

ப்ரீமியம் வீடுகள் மோகம் - நாட்டின் 7 முக்கிய நகரங்களிலும் கடந்த 2-3 வருடங்களாக ப்ரீமியம் வீடுகள் மட்டுமே அதிகமாக அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. இதனால் நடுத்தர (Middle Class) மற்றும் உயர் நடுத்தர (Upper Middle Class) மக்களால் சொந்த வீடு வாங்க முடியாத சூழ்நிலைக்குச் சந்தை மாறியுள்ளது.

ஐ.டி. துறை மந்தநிலை - அடுத்ததாக, மெட்ரோ நகரங்களில் வீடு வாங்கும் முக்கியமான பிரிவினர் ஐ.டி. மற்றும் டெக் துறை ஊழியர்கள் ஆவர். இத்துறையில் அதிகரித்து வரும் பணிநீக்கம் மற்றும் நிரந்தரமற்ற வேலைவாய்ப்புச் சூழல் ஆகியவை ரியல் எஸ்டேட் துறையைப் பெரிய அளவில் பாதித்து வருகின்றன.

55
வீடு வாங்க இதுவே சரியான நேரம் ஏன்?

தேங்கிக் கிடக்கும் வீடுகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், ரியல் எஸ்டேட் துறையினர் இந்த பண்டிகை காலத்தில் அதிகளவில் தள்ளுபடிகளையும், பல சலுகைகளையும் (Offers) வழங்கி வீடுகளை விற்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளனர்.

எனவே, சொந்த வீடு வாங்க நீங்கள் திட்டமிட்டிருந்தால் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளலாம். அதேபோல், ரெப்போ ரேட் உயர்வால் வங்கிகள் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தக்கூடும் என்பதால், இதையும் மனதில் வைத்துக்கொண்டு வீடுகளை வாங்குவது சிறந்தது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories