இன்னும் 2000 ரூபாய் நோட்டு கையில் இருக்கா? ரிசர்வ் வங்கி வெளியிட்ட ஷாக்கிங் அப்டேட்!

First Published | Nov 5, 2024, 11:45 AM IST

இந்திய ரிசர்வ் வங்கி ரூ.2000 நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதாக அறிவித்ததை அடுத்து 98% நோட்டுகள் மாற்றப்பட்டுவிட்ட நிலையில், இன்னும் ரூ.6970 கோடி மதிப்புள்ள நோட்டுகள் புழக்கத்தில் உள்ளது என ஆர்பிஐ கூறியுள்ளது.

RBI on 2000 Rupee Note

இந்தியாவில் ரூ.2000 பிங்க் நிற நோட்டுகள் பயன்பாட்டில் இருந்து திரும்பப் பெறப்பட்டு ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாகியும், மக்கள் இன்னும் ஆயிரக்கணக்கான கோடி 2000 ரூபாய் நோட்டுகளை வைத்திருக்கிறார்கள். இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) இது தொடர்பாக முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறப்பட்ட நோட்டுகள் தவிர, இன்னும் 6,970 கோடி ரூபாய் மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகள் மக்களிடம் இருப்பதாக ஆர்பிஐ கூறியுள்ளது. இது 31 அக்டோபர் 2024 நிலவரம் ஆகும்.

2000 Rupee Notes

ரிசர்வ் வங்கியின் சமீபத்திய தகவலின்படி, 2000 ரூபாய் நோட்டுகளில் 98.04 சதவீதம் திரும்பி வந்துவிட்டன. ஆனால் அவை மத்திய வங்கிகளுக்கு திரும்பும் வேகம் மிகவும் மெதுவாக உள்ளது. ஒரு மாதத்தில் ரூ.147 கோடி மதிப்புள்ள நோட்டுகள் மட்டுமே திரும்பி வருகின்றன.

கடந்த அக்டோபர் 1, 2024 நிலவரப்படி, ரூ. 7,117 கோடி மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகள் இன்னும் புழக்கத்தில் இருப்பதாகக் கூறியது. தற்போது இந்த எண்ணிக்கை ரூ.6,970 கோடியாகக் குறைந்துள்ளது.

Tap to resize

Reserve Bank of India

ஜூலை 1, 2024 அன்று இந்திய ரிசர்வ் வங்கி பகிர்ந்துள்ள தரவுகளின்படி, ரூ.7581 கோடி மதிப்பிலான ரூ.2000 நோட்டுகள் சந்தையில் மீதம் இருந்த நிலையில், அக்டோபர் 1-ஆம் தேதி அறிக்கையில், ரூ.7,117 கோடியாகவும், இப்போது அக்டோபர் 31-ஆம் தேதி அறிக்கையில் ரூ.6,970 கோடியாகவும் குறைந்துள்ளது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஜூலை முதல் தற்போது வரை பார்த்தால் ரூ.611 கோடி மதிப்புள்ள நோட்டுகள்தான் திரும்ப வந்துள்ளன. கடந்த ஆண்டு, மே 2023ல் இந்த நோட்டுகள் திரும்பப்பெறப்பட்டபோது, ​​3.56 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான 2000 ரூபாய் கரன்சி நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. டிசம்பர் 29, 2023க்குள், இந்த எண்ணிக்கை 9,330 கோடி ரூபாயாகக் குறைந்தது. ஆனால் அதற்குப் பிறகு, திரும்பும் வேகம் தொடர்ந்து குறைந்துகொண்டே வந்திருக்கிறது.

Change 2000 Rupee Notes

அதிக மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டை திரும்பப் பெறுவதாக 19 மே 2023 அன்று ஆர்பிஐ அறிவித்தது. இதற்குப் பிறகு, 23 மே முதல் செப்டம்பர் 30, 2023 வரை 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றவும் ரிசர்வ் வங்கி கால அவகாசம் வழங்கியது. இந்த நோட்டுகள் உள்ளூர் வங்கிகள் மற்றும் 19 ரிசர்வ் வங்கி பிராந்திய அலுவலகங்களில் மாற்றப்பட்டன. இருப்பினும், இதற்குப் பிறகு இந்த காலக்கெடு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டது.

RBI update

இன்னும் 2000 ரூபாய் நோட்டு வைத்திருந்தால் அதை உள்ளூர் வங்கிகளில் மாற்ற முடியாது. ஆனால் இன்னும் மாற்ற வழி இருக்கிறது. புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறப்பட்ட இந்த 2000 ரூபாய் நோட்டுகளை அகமதாபாத், பெங்களூரு, பேலாப்பூர், போபால், புவனேஸ்வர், சண்டிகர், சென்னை, குவாஹாத்தி, ஹைதராபாத், ஜெய்ப்பூர், ஜம்மு, கான்பூர், கொல்கத்தா, லக்னோ, ஆகிய இடங்களில் உள்ள 19 ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம்.

மும்பை, நாக்பூர், புது தில்லி, பாட்னா மற்றும் திருவனந்தபுரம் தவிர, மற்ற இடங்களில் அருகிலுள்ள எந்த அஞ்சல் அலுவலகத்திலும் பொதுமக்கள் இந்த நோட்டுகளை டெபாசிட் செய்யலாம்.

Reserve Bank on 2000 rupees

2016 நவம்பரில், புழக்கத்தில் இருந்த ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகளை தடை செய்ய அரசாங்கம் முடிவு செய்தது. அதைத் தொடர்ந்து ஆர்பிஐ 2,000 ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தியது. போதுமான அளவு மற்ற ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு வந்த பிறகு, 2,000 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறுவதாக அறிவிக்கப்பட்டது. 2018-19ல் 2,000 ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பது நிறுத்தப்பட்டதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

Latest Videos

click me!