Post Office Schemes
இந்திய தபால் அலுவலகம் பல வகையான சேமிப்பு திட்டங்களை செயல்படுத்துகிறது. போஸ்ட் ஆபிஸ் திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் கோடிக்கணக்கான மக்கள் நல்ல லாபத்தைப் பெறுகிறார்கள். அதனால்தான் மக்கள் தபால் நிலைய திட்டங்களில் பணத்தை முதலீடு செய்ய விரும்புகிறார்கள். போஸ்ட் ஆபிஸ் முதலீடு ஆபத்து இல்லாததாகவும் கருதப்படுகிறது.
Gram Suraksha Yojana
அதிக லாபம் கொடுக்கும் போஸ்ட் ஆபிஸ் திட்டங்களில் ஒன்று கிராம் சுரக்ஷா யோஜனா. தினமும் ரூ.50 சேமித்து இந்தத் திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் 35 லட்சம் ரூபாய் திரும்பப் பெறலாம். இது கிராமப்புற அஞ்சல் ஆயுள் காப்பீட்டுத் திட்டத் திட்டத்தின் ஒரு பகுதியாகும். 1995ஆம் ஆண்டு நாட்டின் கிராமப்புற மக்களுக்காக இந்தக் காப்பீட்டுத் திட்டம் தொடங்கப்பட்டது. 19 வயது முதல் 55 வயது வரை உள்ளவர்கள் கிராம் சுரக்ஷா யோஜனாவில் முதலீடு செய்யலாம்.
Gram Suraksha Yojana Investment
இத்திட்டத்தில் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.10 லட்சம் வரை முதலீடு செய்யலாம். பிரீமியம் செலுத்த பல ஆப்ஷன்கள் உள்ளன. பிரீமியத்தை மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு மற்றும் வருடாந்திர அடிப்படையில் செலுத்தலாம்.
ஒரு நபர் ஒரு நாளைக்கு ரூ.50 மட்டும் சேமித்து, ஒவ்வொரு மாதமும் ரூ.1,515 இந்தத் திட்டத்தில் முதலீடு செய்தால், அவர் ரூ.35 லட்சம் வரை ஈட்டலாம். 19 வயதில் இந்த பாலிசி எடுத்தால், 55 ஆண்டுகளுக்கு ரூ.1,515 பிரீமியம் செலுத்த வேண்டும்.
Gram Suraksha Yojana Policy
58 வயது வரை இந்த பாலியில் முதலீடு செய்வதாக இருந்தால், ஒவ்வொரு மாதமும் ரூ.1463 செலுத்த வேண்டும். 60 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.1411 செலுத்த வேண்டும். ஒரு மாதம் பிரீமியம் செலுத்த தவறினால், அடுத்த 30 நாட்களுக்குள் டெபாசிட் செய்யலாம்.
55 வருட முதலீட்டில் ரூ.31.60 லட்சமும், 58 வருட முதலீட்டில் ரூ.33.40 லட்சமும், 60 வருட முதலீட்டில் ரூ.34.60 லட்சமும் முதிர்வுத் தொகையாகக் கிடைக்கும்.
Gram Suraksha Yojana Benefits
கிராம் சுரக்ஷா யோஜனா திட்டத்தின் கீழ், முதலீட்டாளர் 80 வயதை நிறைவு செய்த பிறகு இந்தத் தொகை அவருக்கு வழங்கப்படுகிறது. ஒரு நபர் இறந்துவிட்டால், இந்த தொகை அந்த நபரின் சட்டப்பூர்வ வாரிசுக்குச் செல்லும். பாலிசி எடுத்த 3 ஆண்டுகளுக்குப் பிறகு பாலிசியை ரிட்டன் செய்யவும் முடியும். ஆனால், இந்த விஷயத்தில் எந்த நன்மையும் இல்லை.
Gram Suraksha Yojana Bonus
இந்தப் பாலிசியின் கவர்ச்சிகரமான அம்சம், இந்தப் பாலியில் வழங்கப்படும் போனஸ் தொகைதான். கடைசியாக வெளியான அறிவிப்பின்படி, ஒவ்வொரு ரூ.1,000க்கும் ஆண்டுக்கு ரூ.60 போனஸ் கிடைக்கும்.