18 Months DA Arrears: 18 மாத நிலுவை DA தொகை கிடைக்குமா? மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அப்டேட்

Published : Nov 03, 2026, 07:46 AM IST

கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட 18 மாத அகவிலைப்படி நிலுவைத் தொகை மீண்டும் கிடைக்குமா? மத்திய அரசு ஊழியர்களின் கோரிக்கை குறித்து முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.

PREV
12
நல்ல செய்திக்காக காத்திருக்கும் ஊழியர்கள்

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் தங்களின் 18 மாத நிலுவை அகவிலைப்படியை (DA/DR) வழங்கக் கோரி மீண்டும் குரல் எழுப்பியுள்ளனர். கொரோனா காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட இந்தத் தொகையை உடனே வழங்க வேண்டும் என அரசுக்கு ஊழியர் சங்கங்கள் அழுத்தம் கொடுத்து வருகின்றன.

கொரோனா காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட 18 மாத DA மற்றும் DR தொகையை வழங்கக் கோரி மத்திய அரசு ஊழியர்கள் சங்கங்கள் தீவிரமாக களமிறங்கியுள்ளன. ராஞ்சியில் நடந்த கூட்டத்தில், விலைவாசி உயர்வை சுட்டிக்காட்டி பிரதமர் இதில் தலையிட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். பணம் கிடைக்காவிட்டால் நாடு தழுவிய போராட்டம் நடக்கும் எனவும் எச்சரித்துள்ளனர்.

கொரோனா பரவல் காரணமாக 2020 ஜனவரி 1, 2020 ஜூலை 1 மற்றும் 2021 ஜனவரி 1 ஆகிய தேதிகளில் வழங்க வேண்டிய மூன்று DA தவணைகளை மத்திய அரசு நிறுத்தி வைத்தது. இதனால் சுமார் 50 லட்சம் அரசு ஊழியர்களும், 69 லட்சம் ஓய்வூதியதாரர்களும் தங்களின் நிலுவைத் தொகைக்காக நீண்ட நாட்களாகக் காத்திருக்கின்றனர்.

22
தீபாவளிநாளில் கட்டாயம் கிடைக்குமா?

கொரோனா பெருந்தொற்று காரணமாக நாட்டின் பொருளாதாரம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. அந்த நேரத்தில் அரசு கஜானாவில் ஏற்படும் நிதிச் சுமையைக் குறைக்கவே, இந்த மூன்று DA தவணைகளை நிறுத்தி வைக்கும் முடிவை மத்திய அரசு எடுத்தது. பெருந்தொற்று ஏற்படுத்திய பொருளாதார பாதிப்புகள் மற்றும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களுக்கான செலவுகள் காரணமாக, இந்த நிலுவைத் தொகையை இப்போது வழங்க முடியாது என மத்திய நிதி அமைச்சகம் நாடாளுமன்றத்தில் ஏற்கனவே விளக்கம் அளித்திருந்தது.

சமீபத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை மேலும் 3% உயர்த்தி 63% ஆக வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த உயர்வு 2026 ஜூலை 1 முதல் அமலுக்கு வந்துள்ளது. வழக்கமான DA உயர்வு கிடைத்தாலும், கொரோனா காலத்து 18 மாத நிலுவைத் தொகை இன்னும் தீர்க்கப்படாத ஒரு பிரச்சினையாகவே உள்ளது.

18 மாத நிலுவை DA தொகையை வழங்குவது குறித்து மத்திய அரசு இதுவரை எந்த புதிய அறிவிப்போ அல்லது காலக்கெடுவோ வெளியிடவில்லை. ஊழியர் சங்கங்கள் போராட்ட எச்சரிக்கை விடுத்தாலும், பணம் கிடைப்பது இன்னும் உறுதியாகவில்லை. இந்தத் தொகை எப்போது கைக்கு வரும் என்பதே ஊழியர்களின் தற்போதைய பெரிய கேள்வியாக உள்ளது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories