Airline Rules: வியர்வை நாற்றம் அடித்தால் விமானத்தில் இடமில்லை.. 99% பேருக்கு தெரியாத ஃப்ளைட் சீக்ரெட்ஸ்

Published : Jul 20, 2026, 05:45 PM IST

Airline Rules: உடலில் இருந்து வியர்வை துர்நாற்றம் வந்தால்கூட உங்களை விமானத்தில் இருந்து இறக்கிவிடுவார்கள் என்பது தெரியுமா? கேடபதற்கே ஆச்சரியமாக இருக்கும் விமானத்தின் பல ரூல்ஸ் குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

PREV
14
விமானத்தின் விசித்திரமான ரூல்ஸ்

விமானத்தில் பயணிக்க டிக்கெட் மட்டும் எடுத்தால் போதாது, சில முக்கியமான விதிகளைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். உங்கள் உடலில் இருந்து வியர்வை துர்நாற்றம் வந்தால்கூட உங்களை விமானத்தில் இருந்து இறக்கிவிடுவார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? இது மட்டுமல்ல விமானத்தில் பல்வேறு விசித்திரமான ரூல்ஸ் உள்ளது. அது குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

1. உடல் துர்நாற்றம் வந்தால்...

இது கேட்பதற்கு வேடிக்கையாக இருக்கலாம், ஆனால் இது உண்மை. உங்கள் உடலில் இருந்து வரும் துர்நாற்றம் மற்ற பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தினால், உங்களை விமானத்தில் இருந்து இறக்கிவிட பல விமான நிறுவனங்களுக்கு விதி உள்ளது. பல நேரங்களில் பயணிகளின் இந்த விதிகளின் கீழ் இறக்கி விடப்பட்ட சம்பவமும் நடந்துள்ளது.

2. ஷாக் கொடுக்கும் டேசர் கருவி

விமானத்தில் பயணி யாராவது வன்முறையாக நடந்துகொண்டால், அவர்களைக் கட்டுப்படுத்த 'டேசர்' (Taser) எனப்படும் எலக்ட்ரிக் ஷாக் கருவியைப் பயன்படுத்துவார்கள். கொரியன் ஏர்லைன்ஸ் விமானங்களில் இந்த விதிமுறை உள்ளது. இதற்காக விமானப் பணிப்பெண்களுக்கு சிறப்புப் பயிற்சியும் அளிக்கப்படுகிறது.

24
3. திரவப் பொருட்களை எடுத்துச் செல்ல ஒரு டெக்னிக்

பல விமானங்களில் திரவ உணவுகளை அனுமதிக்க மாட்டார்கள். ஆனால், ஒரு எளிய டெக்னிக் மூலம் நீங்கள் அவற்றை எடுத்துச் செல்லலாம். உதாரணமாக, நெய்யை எடுத்துச் செல்ல அனுமதி இல்லை என்றால், அதை ஃப்ரீசரில் வைத்து உறைய வைத்து, திடப்பொருளாக எடுத்துச் செல்லலாம். இந்த விஷயம் பலருக்கும் தெரியாது.

4. பைலட்களுக்கு வெவ்வேறு உணவு

பல விமான நிறுவனங்களில், இரண்டு பைலட்களுக்கும் ஒரே மாதிரியான உணவு வழங்கப்படாது. காரணம், ஃபுட் பாய்சன் காரணமாக ஒருவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டாலும், மற்றொரு பைலட் ஆரோக்கியமாக இருந்து விமானத்தைப் பாதுகாப்பாக இயக்க வேண்டும் என்பதற்காகவே இந்த ஏற்பாடு.

5. பைலட்கள் பெர்சனல் விஷயம் பேசத் தடை

விமானம் 10,000 அடிக்கும் குறைவான உயரத்தில் பறக்கும்போது, பைலட்கள் தங்கள் தனிப்பட்ட விஷயங்களைப் பேசக்கூடாது. அந்த நேரத்தில் விமானம் தொடர்பான விஷயங்களை மட்டுமே பேச வேண்டும் என்பது விதி.

34
6. உங்கள் இருக்கை எப்போது வேண்டுமானாலும் மாறலாம்

விமான டிக்கெட் புக் செய்தவுடன், அந்த இருக்கை நிரந்தரம் என பலர் நினைக்கிறார்கள். ஆனால், விமான ஊழியர்கள் உங்கள் இருக்கையை எப்போது வேண்டுமானாலும் மாற்றும் அதிகாரம் அவர்களுக்கு உண்டு. இதற்கு அவர்களிடம் பல காரணங்கள் இருக்கலாம்.

7. ஆடை கட்டுப்பாடுகள்

சில விமான நிறுவனங்கள், ஆபாசமான அல்லது சர்ச்சைக்குரிய வாசகங்கள் அடங்கிய ஆடைகளை அணிந்திருந்தால், பயணிகளை விமானத்தில் ஏற அனுமதிக்காது. பாதுகாப்புக்கு இடையூறாக இருக்கும் ஆடைகளுக்கும் தடை விதிக்கப்படலாம்.

8. செல்போன் 'ஃப்ளைட் மோட்' (Flight Mode) விதி

விமானம் புறப்படும்போதும் தரையிறங்கும்போதும் செல்போனை 'ஃப்ளைட் மோட்'-இல் வைக்கச் சொல்வது, விமானத்தின் கம்யூனிகேஷன் அமைப்புகளில் (Radio Signals) எவ்வித இடையூறும் (Interference) ஏற்படாமல் தடுக்கவே. செல்போன் சிக்னல்கள் பைலட்களின் ஹெட்செட்டில் ஒருவித தேவையற்ற சத்தத்தை (Static noise) உருவாக்கக்கூடும்.

44
9. தரையிறங்கும் போது விளக்குகள் அணைக்கப்படுவது ஏன்?

இரவு நேரத்தில் விமானம் தரையிறங்கும் போது (Landing) அல்லது புறப்படும் போது (Take-off) உள்ளே இருக்கும் விளக்குகள் மங்கலாக்கப்படும் (Dim lights). ஏதேனும் அவசர நிலை ஏற்பட்டால், பயணிகளின் கண்கள் இருட்டிற்குப் பழக வேண்டும் என்பதற்காகவே இந்த ஏற்பாடு செய்யப்படுகிறது.

10. ஜன்னல் ஷேடுகளை (Window Blinds) திறந்து வைப்பது

தரையிறங்கும் போதும் புறப்படும் போதும் ஜன்னல் திரைகளைத் திறந்து வைக்க வேண்டும் என்பது கட்டாய விதி. வெளியே ஏதேனும் ஆபத்து அல்லது விபத்து நேர்ந்தால், அதை ஊழியர்களும் பயணிகளும் உடனடியாகப் பார்த்து எச்சரிக்க இது உதவுகிறது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories