Bigg Boss : அதகளமாகப்போகும் பிக் பாஸ் வீடு... உள்ளே செல்ல உள்ள அந்த 3 வைல்டு கார்டு போட்டியாளர்கள் யார்?

Published : Oct 01, 2026, 11:39 AM IST

Bigg Boss Tamil Season 10 Wild Card Entry : பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் இந்த வாரம் 3 போட்டியாளர்கள் வைல்டு கார்டு எண்ட்ரியாக உள்ளே செல்ல உள்ளனர். அவர்கள் யார்... யார் என்பதை பார்க்கலாம்.

PREV
15
Bigg Boss Tamil Season 10 Wild Card Entry

பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி தொடங்கிய நாள் முதலே போட்டியாளர்களுக்கு அடுத்தடுத்து புதிய டாஸ்க்குகள் மற்றும் எதிர்பாராத திருப்பங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், 24-வது நாள் எபிசோடில் நடந்த பணப்பெட்டி டாஸ்க் பார்வையாளர்களுக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸாக அமைந்தது. பொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதிக் கட்டத்தில் நடத்தப்படும் பணப்பெட்டி டாஸ்க், இந்த சீசனில் நான்காவது வாரத்திலேயே அறிமுகப்படுத்தப்பட்டது. டேஞ்சர் சோனில் இருந்த லக்‌ஷ்மி பிரியா, குமரன், தன்யா, ஜாவித், அஸ்மிதா மற்றும் சவ்வன்யா ஆகிய 6 போட்டியாளர்களுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டது.

Bigg Boss : அஸ்மிதாவிடம் அடிதடியில் இறங்கிய சாவின்யா... குமரனுக்கு செம டோஸ் கொடுத்த லட்சுமி பிரியா - சூடுபிடிக்கும் பிக் பாஸ்

25
ரூ.5 லட்சத்தை எடுத்துக்கொண்டு வெளியேறிய குமரன்

பிக்பாஸ் வைத்திருந்த பணப்பெட்டியில் ரூ.5 லட்சம் இருந்த நிலையில், பணத்தை எடுத்துக்கொண்டு நிகழ்ச்சியில் இருந்து வெளியேற விருப்பமுள்ளவர்கள் முடிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டது. அப்போது குமரன் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறத் தயாராக இருப்பதாக தெரிவித்தார். அதற்கான காரணத்தையும் அவர் வெளிப்படையாகப் பகிர்ந்துகொண்டார். குமரன் கூறிய காரணம் சக போட்டியாளர்களை மட்டுமின்றி பார்வையாளர்களையும் உணர்ச்சிவசப்பட வைத்தது.

35
பிபி ஹோட்டலாக மாறிய பிக்பாஸ் வீடு

இதற்கிடையில், நான்காவது வாரத்தில் பிக்பாஸ் வீடு முழுவதுமாக ‘பிபி ஹோட்டல்’ ஆக மாற்றப்பட்டது. டேஞ்சர் சோனில் இருந்த 6 போட்டியாளர்கள் ஹோட்டல் விருந்தினர்களாகவும், வீட்டில் இருந்த மற்ற போட்டியாளர்கள் ஹோட்டல் ஊழியர்களாகவும் செயல்பட்டனர். விருந்தினர்களாக இருந்த போட்டியாளர்களுக்கு ஹோட்டலில் தங்கியிருப்பது போன்ற பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டன. இதனால் வழக்கமான பிக்பாஸ் வீட்டின் சூழல் மாறி, போட்டியாளர்களுக்கு வித்தியாசமான அனுபவம் கிடைத்தது.

45
இப்போது ‘பிபி ஹோட்டல் 2.0’!

இந்த சூழலில் 25-வது நாளுக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது. அதில் பிக்பாஸ் வீடு தற்போது ‘பிபி ஹோட்டல் 2.0’ ஆக மாறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த முறை விதிமுறையே தலைகீழாக மாறுகிறது. இதுவரை ஹோட்டல் விருந்தினர்களாக இருந்த போட்டியாளர்கள் இனி ஹோட்டல் ஊழியர்களாகவும், இதுவரை ஊழியர்களாக செயல்பட்டவர்கள் விருந்தினர்களாகவும் மாற வேண்டும் என பிக்பாஸ் அறிவிக்கிறார். இந்த எதிர்பாராத அறிவிப்பைக் கேட்ட போட்டியாளர்கள் உற்சாகத்தில் துள்ளிக் குதித்து கொண்டாடுகின்றனர்.

55
வைல்டு கார்டு யார்?

இது ஒருபுறம் இருக்க இந்த வாரம் இறுதியில் 3 வைல்டு கார்டு போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் செல்ல உள்ளனர். அவர்கள் யார் என்பது சஸ்பென்ஸாக வைக்கப்பட்டிருந்த நிலையில், அந்த மூன்று பேர் யார் என்ற தகவல் இணையத்தில் கசிந்துள்ளது. அதன்படி இந்த சீசனில் முதல் நாளில் எலிமினேட் செய்யப்பட்ட புவியரசு, அக்‌ஷிதா, ஷப்னம் ஆகிய மூவர் தான் வைல்டு கார்டு போட்டியாளராக உள்ளே வந்ததாக தகவல் பரவி வருகிறது. அவர்களின் எண்ட்ரியால் பிக் பாஸ் வீட்டில் என்னென்ன ட்விஸ்ட் அரங்கேறப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Bigg Boss : பணப்பெட்டியோடு பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய போட்டியாளர்? அதிர்ச்சியில் ஹவுஸ்மேட்ஸ்

Read more Photos on
click me!

Recommended Stories