பிக்பாஸ் டைட்டில் வின்னர் அசீமுக்கு அடித்த ஜாக்பாட்... ரூ.50 லட்சத்துடன் கிடைத்த மற்றுமொரு பிரம்மாண்ட பரிசு

First Published | Jan 23, 2023, 7:52 AM IST

வழக்கமாக பிக்பாஸ் டைட்டிலை வெல்லும் போட்டியாளருக்கு ரூ.50 லட்சத்துக்கான காசோலை மற்றும் பிக்பாஸ் டிராபி பரிசாக வழங்கப்படும். 

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி நேற்றுடன் முடிவடைந்துள்ளது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இந்நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டது. 21 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்த பிரம்மாண்ட நிகழ்ச்சியின் இறுதிப்போட்டிக்கு அசீம், விக்ரமன் மற்றும் ஷிவின் ஆகியோர் தகுதி பெற்று இருந்தனர். இதில் ஷிவினுக்கு மூன்றாவது இடம் கிடைத்தது.

அதேபோல் விக்ரமன் 2-ம் இடம் பிடித்திருந்தார். யாரும் எதிர்பார்க்காத விதமாக அசீமுக்கு முதல் பரிசு கிடைத்தது. இந்த சீசனில் ஏராளமான சர்ச்சைகளில் சிக்கிய போட்டியாளர் என்றால் அது அசீம் தான். இந்த சீசனை மக்கள் விரும்பிப் பார்க்க காரணமாக இருந்த போட்டியாளரும் அவர்தான். இரண்டாம் வாரத்திலேயே ரெட் கார்டு கொடுத்து வெளியேற்ற வேண்டும் என மக்கள் ஆக்ரோஷமாக விமர்சித்த அசீம் டைட்டில் வென்றிருப்பது பலருக்கும் ஆச்சர்யமான ஒன்றாக உள்ளது.

இதையும் படியுங்கள்... பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் பட்டத்தை தட்டி சென்றார் அஸிம்!!

Tap to resize

வழக்கமாக பிக்பாஸ் டைட்டிலை வெல்லும் போட்டியாளருக்கு ரூ.50 லட்சத்துக்கான காசோலை மற்றும் பிக்பாஸ் டிராபி பரிசாக வழங்கப்படும். ஆனால் இந்த சீசனில் முதன்முறையாக டைட்டில் வின்னருக்கு மேலும் ஒரு பிரம்மாண்ட பரிசு வழங்கப்பட்டது. அது என்னவென்றால் மாருதி சுசுகி நிறுவனத்தின் விடாரா பிரீஸா காரும் சர்ப்ரைஸ் கிப்ட்டாக வழங்கப்பட்டது.

இதுவரை நடந்து முடிந்துள்ள 6 சீசன்களில் பைனலில் வென்றவருக்கு கார் பரிசாக வழங்கப்படுவது இதுவே முதன்முறை ஆகும். அந்த காரின் விலை ரூ.10 லட்சத்துக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி அசீமுக்கு ஒரு நாளைக்கு ரூ.22 ஆயிரம் சம்பளமாக வழங்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

பிக்பாஸ் பைனலில் வெற்றிபெற்று ரூ.50 லட்சத்தை வென்றால் அந்த பணத்தில் இருந்து பாதி தொகையை கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் படிப்புச் செலவுக்கு வழங்குவேன் என்றும் அசீம் கூறி இருந்தார். அவரின் இந்த முடிவுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்களும் குவிந்த வண்ணம் உள்ளன

இதையும் படியுங்கள்... வெற்றி வாய்ப்பு அதிகம் இருந்தும் விக்ரமன் பைனலில் தோற்றுப்போனது ஏன்? - வெளியான ஷாக்கிங் பின்னணி

Latest Videos

click me!