காட்டுத்தீ போல் பரவும் வில்லங்கமான வீடியோ... பாரு - கம்ருதீனுக்கு ரெட் கார்டு கொடுக்கப்படுமா?

Published : Jan 02, 2026, 05:29 PM IST

பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் காதல் ஜோடியாக வலம் வரும் பார்வதி மற்றும் கம்ருதீனை ரெட் கார்டு கொடுத்து வெளியேற்ற வேண்டும் என நெட்டிசன்கள் வலியுறுத்தி வருகிறார்கள். அதைப்பற்றி பார்க்கலாம்.

PREV
14
VJ Parvathy and Kamrudin Controversy

சண்டைகளும் சர்ச்சைகளும் நிறைந்த நிகழ்ச்சி தான் பிக் பாஸ். தமிழில் இந்நிகழ்ச்சி வெற்றிகரமாக 8 சீசன்கள் இதுவரை நடந்து முடிந்துள்ள நிலையில், கடந்த அக்டோபர் மாதம் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசன் தொடங்கப்பட்டது. இந்த சீசன் தொடங்கியதில் இருந்து எந்த விறுவிறுப்பும் இன்றி மந்தமாக சென்று கொண்டிருந்தது. பிக் பாஸ் வரலாற்றிலேயே மிகவும் மோசமான சீசன் என்கிற பெயரையும் எடுத்தது. இந்த சீசன் இன்னும் ஓரிரு வாரங்களில் முடிவடைய உள்ள நிலையில் தற்போது ஆட்டம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.

24
அத்துமீறும் பாரு - கம்ருதீன்

பிக் பாஸ் நிகழ்ச்சியை பொருத்தவரை ஒவ்வொரு சீசனிலும் சர்ச்சைக்குரிய போட்டியாளர் சிலர் இருப்பர். அந்த வகையில் இந்த சீசனிலும் அதற்கு பஞ்சமில்லாமல் இருக்கிறது. இந்த சீசனில் சர்ச்சைக்குரிய ஜோடியாக பார்வதி மற்றும் கம்ருதீன் வலம் வருகிறார்கள். இவர்களை ரசிகர்களே டாக்ஸிக் கப்பிள்ஸ் என அழைக்கும் அளவுக்கு தரக்குறைவான செயல்களை செய்து தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகின்றனர். இவர்களை உடனடியாக பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்ற வேண்டும் என இணையத்தில் ஏராளமானோர் வலியுறுத்தி வருகிறார்கள்.

34
ரெட் கார்டு கொடுக்கப்படுமா?

இந்த நிலையில் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்கில் சான்றாவை மிகவும் கொச்சையான வார்த்தைகளால் திட்டி அவரை கீழே தள்ளி வெளியேற்றிய கம்ருதீனுக்கு கடும் கண்டனங்கள் எழுத வண்ணம் உள்ளன. அதை உடனிருந்து பார்த்துக் கொண்டிருந்த பார்வதியையும் நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகிறார்கள். கம்ரோதனின் இந்த செயலால் அவரை இந்த வாரம் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்ற வேண்டும் என நெட்டிசன்கள் வலியுறுத்தி வருகின்றனர். விஜய் சேதுபதியை டேக் செய்து கம்ருதீன் மற்றும் பார்வதி செய்யும் லீலைகளை பதிவிட்டு வருகிறார்கள்.

44
ஜோடியாக எலிமினேட் செய்ய வேண்டும்

அதேபோல் இந்த வாரம் விஜய் சேதுபதி புத்தாண்டுக்காக வீட்டில் உள்ள போட்டியாளர்கள் அனைவருக்கும் புது ஆடைகள் வழங்கியது மட்டுமின்றி, இரவு விருந்தும் ஏற்பாடு செய்திருந்தார். இந்த இந்த விருந்தின் போது பார்வதியும் கம்யூனிதிலும் அருகருகே அமர்ந்து சாப்பிட்ட நிலையில், கம்ருதீன் பார்வதியை பார்த்து ஹோமிலியாக இருக்கிறாய் என சொல்ல, அதற்கு அவர் வேணும்னா ஹாட்டா மாறிடவா என டபுள் மீனிங்கில் ஜோக் அடித்து சிரித்துள்ளார். அவர்கள் இருவரும் இப்படி கொச்சையாக பேசிக் கொள்ளும் வீடியோவை நெட்டிசன்கள் வைரலாக்கி வருவதோடு, இந்த வாரம் இருவரையும் ஜோடியாக எலிமினேட் செய்யுங்கள் உங்களுக்கு டிஆர்பி பிச்சிக்கும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Read more Photos on
click me!

Recommended Stories