பிக் பாஸ் நிகழ்ச்சியில் டிக்கெட் டூ பினாலே டாஸ்கின் போது சாண்ட்ராவுக்கும் கம்ருதீனுக்கும் இடையே மோதல் வெடித்திருக்கிறது. இதையடுத்து சாண்ட்ரா ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி தற்போது பைனலை நெருங்கிவிட்டது. இன்னும் இரண்டு வாரங்களில் இறுதிப்போட்டி நடைபெற இருக்கிறது. இந்த சமயத்தில் முதல் ஆளாக பைனலுக்குள் காலடி எடுத்து வைக்கப்போகும் நபர் யார் என்பதை முடிவு செய்யும் டிக்கெட் டூ பினாலே டாஸ்க் தற்போது நடத்தப்பட்டு வருகிறது. இந்த டாஸ்கில் வெற்றிபெறும் நபர் நேரடியாக பைனலுக்குள் நுழையும் வாய்ப்பை பெறுவார். அதனால் இந்த டிக்கெட் டூ பினாலே டாஸ்கில் வெற்றிபெற போட்டியாளர்கள் கடும் முனைப்பு காட்டி வருகின்றனர்.
24
கம்ருதீன் - பார்வதி காதல்
பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒவ்வொரு சீசன்களிலும் காதல் ஜோடிகளுக்கு பஞ்சமில்லாமல் இருக்கிறது. முதல் சீசனில் ஓவியா - ஆரவ் தொடங்கி, தற்போது கம்ருதீன் - பாரு வரை இந்த லிஸ்ட் நீண்டுகொண்டே செல்கிறது. இதுவரை இருந்த காதல் ஜோடிகளைக் காட்டிலும் கம்ருதீன் - பாரு ஒரு வினோதமான காதல் ஜோடி என்றே சொல்லலாம். அடிக்கடி சண்டை போட்டுக் கொள்வதும், திடீரென கொஞ்சி பேசிக் கொள்வதுமாக இருவரும் இருக்கிறார்கள். இதனால் சக போட்டியாளர்களே குழம்பிப் போய் உள்ளனர்.
34
சாண்ட்ரா மோதல்
பார்வதி - கம்ருதீன் காதல் குறித்து சாண்ட்ரா தன்னுடைய கருத்தை பார்வதியிடம் சொல்ல, அவர் அதை கம்ருதீனிடம் போட்டுக் கொடுத்துவிடுகிறார். இதனால் கோபமடைந்த கம்ருதீன், சாண்ட்ராவை ஃபிராடு என திட்டி சண்டை போடுகிறார். இதனால் கோபமடையும் சாண்ட்ரா, கார்டன் ஏரியாவில் வந்து அழுதுகொண்டிருக்க, அவரை விக்ரம் மற்றும் அரோரா சமாதானப்படுத்துகிறார்கள். இந்த சண்டை டிக்கெட் டூ பினாலே டாஸ்கிலும் தொடர்ந்திருக்கிறது. அதன்படி கார் டாஸ்க் ஒன்று நடத்தப்பட்டு இருக்கிறது.
ஒரே காரில் அனைவரும் அமர்ந்திருக்க வேண்டும். இந்த டாஸ்க்கில் பார்வதி, கம்ருதீன், சாண்ட்ரா ஆகியோர் அருகருகே அமர்ந்திருக்க, கம்ருதீன் சாண்ட்ராவிடம் சண்டை போடுகிறார். உன்னைமாதிரி நான் இங்க பொறுக்கித்தனமா பண்ணிட்டு இருக்கேன் என கம்ருதீனிடம் சாண்ட்ரா சொல்ல, பெரிய இவ, மூஞ்ச பாரு என சாண்ட்ராவிடம் தரக்குறைவாக பேசுகிறார் கம்ருதீன். இந்த சண்டை முற்றிப்போய், சாண்ட்ராவிற்கு பேனிக் அட்டாக் வந்து மயக்கம் போட்டு விழுந்திருக்கிறார். இதையடுத்து அவரை சிகிச்சைக்காக மருத்துவமனை அழைத்து சென்றிருக்கிறார்கள். சிகிச்சைக்கு பின்னர் அவர் மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் அழைத்துவரப் பட்டிருக்கிறார்.