புரோமோவில் வினோத் பாபுவிடம் பேசிய அவரது மனைவி, பிக் பாஸ் வீட்டில் நடக்கும் விஷயங்களை மனதளவில் எடுத்துக்கொள்ளாமல் விளையாட்டாக அணுக வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்.
அவர் கூறியதாவது, "எமோஷனலாக இல்லாமல் இதை ஒரு கேமாக பாருங்க. இந்த கேமில் இப்படித்தான் ஹர்ட் பண்ணுவாங்க, இப்படித்தான் ட்ரிகர் பண்ணுவாங்க. சில நேரங்களில் குற்றவாளி மாதிரி உன்னை அக்யூஸ் பண்ணுவாங்க. இதெல்லாம் இந்த விளையாட்டின் இயல்புதான். இதையெல்லாம் தாண்டி ஒரு விஷயம் இருக்கிறது அல்லவா? அதை நீ டார்கெட் செய்தால், சக போட்டியாளர்கள் பேசும் வார்த்தைகளுக்கெல்லாம் நீ விழவே மாட்ட" என்று தன்னம்பிக்கை அளிக்கும் வகையில் பேசியுள்ளார்.
மனைவியின் இந்த அறிவுரை வினோத் பாபுவுக்கு மட்டுமின்றி, பிக் பாஸ் நிகழ்ச்சியைப் பார்க்கும் ரசிகர்களிடையேயும் கவனம் பெற்றுள்ளது. அதேபோல் வினோத் பாபுவின் மகன் ஜேசனிடம் சென்று, ஏன் நீங்க எப்பவுமே அப்பா கூட சண்டை போடுறீங்க என கேட்க, அதற்கு ஜேசன், உங்க அப்பா மட்டும் என்ன நோண்டிகிட்டே இருப்பாரு, நான் சும்மா இருக்கணுமா என்று நக்கலாக கேட்டிருக்கிறார்.