இந்த ஸ்கூட்டரை வாங்கிட்டா பஸ் வேண்டாம்.. ஷியோமி ஸ்கூட்டர் வந்தாச்சு

Published : Jan 22, 2026, 09:01 AM IST

ஷியோமி தனது புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் 6 லைட் மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. இது 25km/h வேகம், 25km ரேஞ்ச் மற்றும் 10-இன்ச் டயர்களுடன் தினசரி நகரப் பயணங்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

PREV
14
ஷியோமி ஸ்கூட்டர் 6 லைட்

ஷியோமி (Xiaomi) தனது புதிய Electric Scooter 6 Lite மாடலை உலக சந்தைக்காக அறிமுகப்படுத்தியுள்ளது. இது Electric Scooter 6 சீரிஸில் அதிகக் குறைந்த விலை மாடல் என்ற நிலையில், Scooter 6 மற்றும் Scooter 6 Max க்குக் கீழே இடம் பெறுகிறது. இதை தினசரி கம்பெனி அலுவலகப் பயணம், குறுகிய தூர நகரச் சுற்றுப்பயணம் போன்ற தேவைகளை கவனத்தில் கொண்டு, லேசான எடை + காம்பாக்ட் வடிவம் கொண்டதாக வடிவமைத்துள்ளது. ஆனால் தற்போது அதிகாரப்பூர்வ விலை விவரம் வெளியிடப்படவில்லை.

24
இ-ஸ்கூட்டர் 25கிமீ ரேஞ்ச்

இந்த இ-ஸ்கூட்டரில் 300W தொடர்ச்சி பவர் மற்றும் 500W பீக் அவுட்புட் தரக்கூடிய Hall-effect brushless மோட்டார் உள்ளது. அதிகபட்ச வேகம் 25km/h வரை செல்லும். மேலும் 15% சரிவு உள்ள ஏற்றங்களையும் சமாளிக்கும் திறன் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 216Wh லித்தியம் பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. 15km/h வேகத்தில் 25km வரை செல்லலாம் என்று சொல்லப்படுகிறது. Sport mode-ல் ரேஞ்ச் சுமார் 20km வரை குறையலாம்.

34
10 இன்ச் நியூமேடிக் டயர் ஸ்கூட்டர்

சவாரி கம்ஃபர்ட் மேம்பட 25mm dual-spring front suspension வழங்கப்பட்டுள்ளது. மேலும் 10-இன்ச் நியூமேடிக் டயர்கள் இருப்பதால் சீரற்ற சாலையிலும் பிடிப்பு நன்றாக இருக்கும். பிரேக்கிங் பாதுகாப்பிற்கு முன்புறம் drum brake, பின்னால் E-ABS கொடுக்கப்பட்டுள்ளது. இரவு பயணத்திற்கு 2.5W ஹெட்லாம்ப் (சுமார் 15 மீட்டர் வெளிச்சம்) மற்றும் பிரேக் போடும்போது ஒளிரும் பின்புற விளக்கு உள்ளது.

44
தினசரி பயணத்திற்கு சிறந்த ஸ்கூட்டர்

இதில் Pedestrian (6km/h), Standard (15km/h), Sport (25km/h) என 3 ரைடிங் மோட்கள் உள்ளன. ஹேண்டிலில் இருக்கும் டிஸ்ப்ளேவில் வேகம், பேட்டரி, மோடு போன்ற தகவல்கள் தெரியும். Xiaomi Home app மூலம் ரேஞ்ச்/பேட்டரி நிலை, டிரிப் ஹிஸ்டரி, டயர் பிரஷர், மோட்டார் லாக் போன்ற செட்டிங்ஸையும் கட்டுப்படுத்தலாம். இதன் ஃப்ரேம் 100kg வரை தாங்கும். ஸ்கூட்டரின் எடை 18.1kg. உடல் IPX4, பேட்டரி IPX6 ரேட்டிங் கொண்டது. இந்தியாவில் இன்னும் Xiaomi e-scooter அதிகாரப்பூர்வமாக வராததால், 6 Lite இந்தியாவுக்கு வர வாய்ப்பு குறைவு என எதிர்பார்க்கப்படுகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories