மழைக்காலம் தொடங்கி விட்டாலே வீடு, கார், பைக் என எல்லா இடங்களிலும் பாம்புகள் தென்படுகின்றன. காருக்குள், குறிப்பாக எப்போதும் சூடாக இருக்கும் இன்ஜின் பகுதி அல்லது பானெட்டுக்கு அடியில் பாம்புகள் ஏன் நுழைகின்றன என்பது பலருக்கும் ஆச்சரியமாக இருக்கிறது. இதற்கான காரணம் என்ன தெரியுமா? இதுபோன்ற சமயங்களில் உங்களை எப்படிப் பாதுகாத்துக் கொள்வது? பாம்புகள் வராமல் தடுப்பது எப்படி? என்பது குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.
பாம்பு நுழைவதற்கு இதுதான் காரணம்
மழைக்காலத்தில் பாம்புகளின் புற்றுகளுக்குள் தண்ணீர் புகுந்துவிடும். அதனால், அவை பாதுகாப்பான, உலர்ந்த இடங்களைத் தேடி வெளியேறுகின்றன. கார் அல்லது பைக் இன்ஜின் அணைக்கப்பட்ட பிறகும் சிறிது நேரம் சூடாக இருக்கும். இந்த வெப்பம் பாம்புகளை ஈர்க்கிறது. மேலும், காருக்கு அருகில் வரும் எலி போன்ற சிறிய உயிரினங்களை வேட்டையாடவும் பாம்புகள் அங்கு வருகின்றன.
இதையும் படிங்க: டாடா EV-க்களுக்கே டஃப் கொடுக்கும் MG Windsor! 75,000 பேர் வாங்கிய 'ABC' காரில் அப்படி என்ன ஸ்பெஷல்?