Bike Seat: நாம் ஓட்டும் பைக்குகளின் பின் சீட் அதிக உயரம் கொண்டதாக இருப்பது உங்களுக்கு தெரியும். இது ஸ்டைலுக்காக என்று நீங்கள் நினைத்திருக்கலாம். ஆனால் இதற்கு பின்னால் ஒரு முக்கியமான காரணம் உள்ளது. அது என்னவென்று பார்ப்போம்.
இந்தியாவில் பெரும்பாலான பைக்குகளில் ஓட்டுபவருக்கு பின்னால் இருக்கும் சீட் மிகவும் உயரமாக இருக்கும். இது ஸ்டைல் என்று நினைப்பதால் இளைஞர்களுக்கு ரொம்ப பிடிக்கும். ஆனால் நமது அம்மா உள்ளிட்ட வயதானவர்கள் அந்த சீட்டில் ஏறி உட்காருவதில் மிகவும் சிரமம் உண்டாகும். ஆனாலும் பல நிறுவனங்கள் இந்த டிசைனை தான் விரும்புகின்றன. இது வெறும் ஸ்டைலுக்காக மட்டும் இல்லை. பின்னணியில் பெரும் காரணங்கள் உள்ளன.
23
பைக் பேலன்ஸ் தவறாது
உயரமான பின் சீட், பைக்கிற்கு ஸ்போர்ட்டி லுக் கொடுக்கும் என்று பலரும் நினைக்கிறாங்க. ஆனா, இந்த டிசைன் பைக்கோட செயல்திறனை அதிகப்படுத்துகிறது. முன் மற்றும் பின் சக்கரங்களுக்கு இடையே எடையை சமமாக பிரிக்க இந்த டிசைன் உதவுகிறது. பின்னால் அமர்ந்திருப்பவர் உயரமான சீட்டில் இருப்பதால், பைக்கின் எடை பேலன்ஸ் ஆகும். இதனால, பைக் ஸ்கிட் ஆகுறது, கண்ட்ரோல் இழக்குறது போன்ற பிரச்சனைகள் குறையும். வேகமா போகும்போதும் பேலன்ஸ் தவறாது. இதுமட்டுமில்லாம, பின்னால் இருப்பவருக்கு முன்னாடி இருக்கிற ரோடு நன்றாக தெரியும்.
33
விபத்து ஏற்படும் அபாயம் குறைவு
பின் சீட் உயரமாக இருப்பதால் விபத்துகள் குறையுமாம். எப்படி என்றால் சாதாரண பைக்குகளில் புடவை, துப்பட்டா போன்றவை சக்கரத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. ஆனால் உயரமான சீட்டில் இந்த பிரச்சனை குறைவு. இன்னொரு காரணம், ஏரோடைனமிக்ஸ். உயரமான சீட்டில் அமரும்போது, பயணி இயல்பாகவே முன்னோக்கி சாய்ந்து அமர்வார். இதனால, வேகமாக போகும்போது காத்தோட உராய்வு குறைந்து டிரைவருக்கு ஓட்டுறது சுலபமாக இருக்கும். மேடு பள்ளங்களில் போகும்போது, இந்த உயரமான சீட் அமைப்பு, பின்னால் இருப்பவரை குலுக்கல்களில் இருந்து பாதுகாக்கும். பயணமும் சுகமாக இருக்கும்.