இந்திய கார் மார்க்கெட்டில் காம்பேக்ட் எஸ்யூவி கார்களுக்கு எப்போதுமே ஒரு தனி மவுசு உண்டு. இந்த வரவேற்பைப் பயன்படுத்திக்கொள்ள, ஜப்பானைச் சேர்ந்த ஹோண்டா நிறுவனம் இந்தியாவுக்காகவே ஒரு புதிய சப்-4 மீட்டர் எஸ்யூவியை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. மாருதி சுசுகி பிரெஸ்ஸா, டாடா நெக்ஸான், மஹிந்திரா XUV 3XO, கியா சோனெட், ஹூண்டாய் வென்யூ போன்ற பிரபலமான மாடல்களுக்கு இந்த புதிய எஸ்யூவி நேரடிப் போட்டியாக இருக்கும்.
இந்த நிதியாண்டில் ஹைப்ரிட் தொழில்நுட்பத்தில் அதிக கவனம் செலுத்தி, ஆறு புதிய மாடல்களை அறிமுகப்படுத்தப் போவதாக ஹோண்டா சமீபத்தில் அறிவித்திருந்தது. ஏற்கனவே, சிட்டி ஃபேஸ்லிஃப்ட் மற்றும் ZR-V ஆகிய கார்களை நிறுவனம் அறிமுகப்படுத்திவிட்டது. இதுதவிர, ஹைப்ரிட் ஸ்போர்ட்ஸ் கார், சிவிக் மற்றும் CR-V ஆகியவற்றின் ஹைப்ரிட் மாடல்களையும் கொண்டுவரும் திட்டத்தில் உள்ளது.