Electric Moped: இனி டென்ஷன் இல்லை! ரூ.10 சார்ஜில் 80 கி.மீ மைலேஜ்! சார்ஜ் தீர்ந்தா சைக்கிள் ஆகிடும்! அசத்தும் எலக்ட்ரிக் வண்டி!

Published : Jun 23, 2026, 11:08 AM IST

Komaki XR1 Electric Moped: பெட்ரோல், டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறி வருகின்றனர். இந்த சூழலில், கொமாகி நிறுவனம் ஒரு புதிய எலக்ட்ரிக் மொபெட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. 

PREV
15
பெடல்களும் உண்டு..

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. இதனால் பெட்ரோல் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இதன் காரணமாக பல்வேறு தரப்பினர் எலக்ட்ரிக் வாகனம் பக்கம் திரும்பி வருகின்றனர். இந்நிலையில் மாற்று வாகனங்களை தேடுபவர்களுக்கு Komaki XR1 ஒரு நல்ல தேர்வாக இருக்கும். இது பேட்டரியில் இயங்கும் வண்டி. ஒருவேளை வந்து கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக சார்ஜ் தீர்ந்துவிட்டால் இதில் உள்ள பெடல்களைப் பயன்படுத்தி சைக்கிள் போல ஓட்டிச் செல்ல முடியும். அதனால், பாதியிலேயே நிற்கும் டென்ஷன் இல்லை.

25
டிரைவிங் லைசன்ஸ் தேவையில்லை

Komaki XR1 மொபெட்டை ஓட்டுவதற்கு டிரைவிங் லைசன்ஸ் தேவையில்லை. அதேபோல, RTO அலுவலகத்தில் நம்பர் பிளேட்டுக்காக பதிவு செய்ய வேண்டிய அவசியமும் இல்லை. இது குறைந்த வேகத்தில் செல்லும் எலக்ட்ரிக் வாகன வகையைச் சேர்ந்தது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பெண்கள் மற்றும் முதியவர்கள் எந்த வித டென்ஷனும் இல்லாமல் இதை ஓட்டி செல்லலாம். ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் இந்த வண்டி சுமார் 70 முதல் 80 கிலோமீட்டர் வரை செல்லும். இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 25 கிலோமீட்டர்.

35
மின்சார செலவு எவ்வளவு?

Komaki XR1 மொபெட்டின் பேட்டரி முழுமையாக சார்ஜ் செய்ய 3 முதல் 4 மணி நேரம் மட்டுமே ஆகும். ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்ய மின்சார செலவு வெறும் 8 முதல் 10 ரூபாய் மட்டுமே. இது தினசரி பயணச் செலவை கணிசமாகக் குறைக்கிறது.

45
பிரகாசமான ஹெட்லைட்

இந்த மொபெட்டில் பிரகாசமான ஹெட்லைட், டெயில் லைட் மற்றும் டர்ன் இண்டிகேட்டர்கள் உள்ளன. மேடு பள்ளமான சாலைகளில் செல்ல நல்ல சஸ்பென்ஷன் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது. முன்னால் பொருட்கள் வைக்க ஒரு பெரிய கூடை இருக்கிறது. இரண்டு பேர் வசதியாக அமர, இரண்டு தனித்தனி குஷன் சீட்களை நிறுவனம் வடிவமைத்துள்ளது.

55
இதன் விலை எவ்வளவு?

தற்போது இந்திய சந்தையில் Komaki XR1 எலக்ட்ரிக் மொபெட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.34,499. கடந்த ஆண்டு ஜூன் மாதம் அறிமுகமானபோது இதன் விலை ரூ.29,999 ஆக இருந்தது. டிமாண்ட் காரணமாக, ஓராண்டில் இதன் விலையை நிறுவனம் ரூ.4,500 வரை உயர்த்தியுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories