Bike Loan Tips: ரூ.15 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் சம்பளம் வரை.. எந்த பைக் வாங்கலாம்? முழு பட்டியல்!

Published : Jun 22, 2026, 09:31 PM IST

Bike Loan Tips: உங்கள் சம்பளத்திற்கு ஏற்ற பைக்கை தேர்வு செய்ய ஒரு பொன்னான விதியை நிதி நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள். அதை தெரிந்துகொண்டால் தேவையற்ற கடன் சுமையைத் தவிர்க்கலாம்.

PREV
14
Bike Loan Tips

புதிய பைக் வாங்குவது பல இளைஞர்களின் கனவாக இருந்தாலும், வருமானத்தை மீறி கடன் வாங்கி வாகனம் வாங்கினால் எதிர்காலத்தில் பெரிய நிதிச் சுமையை உருவாக்கலாம். குறிப்பாக மாதந்தோறும் செலுத்த வேண்டிய இஎம்ஐ, குடும்பச் செலவுகளையும் சேமிப்பையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. அதனால் வாகனத்தைத் தேர்வு செய்வதே புத்திசாலித்தனமான வருமானத்திற்கு முடிவாகக் கருதப்படுகிறது.

24
10-3-15 விதி என்ன சொல்கிறது?

நிதி ஆலோசகர் அன்குர் வாரிகூ பரிந்துரைக்கும் 10-3-15 விதி, பைக் வாங்குபவர்களுக்கு எளிமையான வழிகாட்டியாக உள்ளது. வாகனத்தின் மொத்த விலையில் குறைந்தது 10 சதவீதத்தை முன்பணமாக செலுத்த வேண்டும். கடன் காலம் மூன்று ஆண்டுகளுக்கு மேல் இருக்கக் கூடாது. மேலும், மாதாந்திர இஎம்ஐ உங்கள் கைக்கு வரும் சம்பளத்தில் 15 சதவீதத்தைத் தாண்டக்கூடாது என்பதே இந்த விதியின் முக்கிய அம்சமாகும்.

34
சம்பளத்திற்கு ஏற்ற பைக் தேர்வு

மாதம் ரூ.15,000 சம்பளம் பெறுபவர்கள் குறைந்த விலை மற்றும் அதிக மைலேஜ் தரும் பைக்குகளைத் தேர்வு செய்வது நல்லது. ரூ.25,000 வருமானம் உள்ளவர்கள் ஸ்டைலான பயணப் பைக்குகளை பரிசீலிக்கலாம். ரூ.50,000 சம்பளம் பெறுபவர்கள் பிரீமியம் வகை குரூசர் பைக்குகளைத் தேர்வு செய்யலாம். மாதம் ரூ.1 லட்சம் அல்லது அதற்கு மேல் வருமானம் உள்ளவர்கள் உயர்தர ஸ்போர்ட்ஸ் அல்லது பிரீமியம் குரூஸர் பைக்குகளை நிதி அழுத்தம் இல்லாமல் வாங்க முடியும்.

44
பைக் வாங்கும் முன் இதை மறக்காதீர்கள்

வாகனத்தின் விலையை மட்டும் பார்க்காமல், மாதாந்திர இஎம்ஐ, காப்பீடு, பராமரிப்பு செலவு, எரிபொருள் செலவு உள்ளிட்டவற்றை கணக்கில் எடுத்துக்கொள்வது அவசியம். சரியான நிதித் திட்டத்துடன் பைக் வாங்கினால், உங்கள் கனவு வாகனம் மகிழ்ச்சியையும், மனநிம்மதியையும் ஒருசேர தரும்.

Read more Photos on
click me!

Recommended Stories