ஹோண்டா ஆக்டிவா vs டிவிஎஸ் ஜூபிடர்: அதிக மைலேஜ்.. பெரிய ஸ்டோரேஜ் - எந்த ஸ்கூட்டர் சிறந்தது?

First Published | Aug 25, 2024, 8:54 AM IST

புதிய டிவிஎஸ் ஜூபிடர் மற்றும் ஹோண்டா ஆக்டிவா 6G ஆகிய இரண்டும் பிரபலமான ஸ்கூட்டர்கள். அம்சங்கள், செயல்திறன் மற்றும் விலை ஆகியவற்றின் அடிப்படையில் இரண்டையும் ஒப்பிட்டு, உங்களுக்கு எது சிறந்தது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

Jupiter vs Activa

இந்தியாவில், பத்து ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ஸ்கூட்டர் விற்பனை உச்சத்தை எட்டியுள்ளது. குறிப்பாக பெண்களும், ஆண்களும் அதிகரித்து வரும் போக்குவரத்து பிரச்சனையை சமாளிக்க ஸ்கூட்டர்களே சிறந்ததாக கருதுகின்றனர். பிரபல நிறுவனமான டிவிஎஸ் சமீபத்தில் தனது மேம்படுத்தப்பட்ட ஜூபிடரின் பதிப்பை வெளியிட்டது. இது மேலும் ஹோண்டா ஆக்டிவா 6ஜி பதிப்பின் விற்பனையையும் தூள்தூளாக்கும் என்றே கூறப்படுகிறது.

TVS Jupiter 110

அதேபோல H-Smart தொழில்நுட்பத்துடன் 2023 ஆம் ஆண்டில் புதுப்பிக்கப்பட்ட 'ஸ்மார்ட்' வகையுடன் ஹோண்டா ஆக்டிவா பலரையும் ஈர்க்கிறது. மேலும் நியூ ஜூபிடர் IGO உதவியுடன் வருகிறது. ஹோண்டா மற்றும் ஜூபிடர் ஸ்கூட்டர் இடையே உள்ள முக்கிய வேறுபாடுகள், ஒற்றுமை, இவற்றில் எது சிறந்தது போன்றவற்றை தெரிந்து கொள்வோம். புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஜூபிடர் முந்தைய 109 சிசியில் இருந்து சற்று புதுப்பிக்கப்பட்ட 113 சிசி 4 ஸ்ட்ரோக், ஃப்யூவல்-இன்ஜெக்டட் இன்ஜினுடன் வருகிறது.

Tap to resize

Honda Activa 6G Scooter

இது IGO தொழில்நுட்பத்தின் உதவியுடன் 7.9 bhp மற்றும் 9.8 Nm டார்க்கை உற்பத்தி செய்கிறது. இந்த ஸ்கூட்டரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 82 கிமீ என்று நிறுவனம் கூறுகின்றது. ஆக்டிவா ஆனது 7.7 பிஎச்பி ஆற்றலையும் 8.9 என்எம் டார்க்கையும் உற்பத்தி செய்யும் 110 சிசி எரிபொருள்-இன்ஜெக்டட் எஞ்சினுடன் வருகிறது. இந்த இரண்டு ஸ்கூட்டர்களும் சுமார் 105 கிலோ பவர்-டு-எடை விகிதத்தில் வருகின்றன. ஜூபிடர் இப்போது ஒரு புதிய டிஜிட்டல் க்ளஸ்டர், புளூடூத் இணைப்பு உடன் வருகிறது.

TVS Motor

இது சைட் ஸ்டாண்ட் கட் ஆஃப், ஆட்டோ ஸ்டார்ட்-ஸ்டாப், இரண்டு ஹெல்மெட்களுக்கு போதுமான இருக்கை சேமிப்பு, தானியங்கி டர்ன் சிக்னல் செயலிழப்பு ஆகியவற்றுடன் வருகிறது. தவிர, எல்இடி விளக்குகள், டிவிஎஸ் ஸ்மார்ட் கனெக்ட் நேவிகேஷன், ஃபைண்ட் மை ஸ்கூட்டர், ரியல் டைம் மைலேஜ், வாய்ஸ் அசிஸ்ட் போன்ற அம்சங்கள் ஈர்க்கக்கூடியவையாக உள்ளது. தற்போதைய ஆக்டிவா எச்-ஸ்மார்ட் வேரியண்டில் ஸ்மார்ட் கீ, கீலெஸ் ஸ்டார்ட், எல்எஸ்இடி ஹெட் லேம்ப்கள் போன்ற அம்சங்கள் உள்ளன.

Activa 6G

ஆனால் ஆக்டிவாவில் இருக்கைக்கு அடியில் ஒரு ஹெல்மெட்டுக்கு மட்டுமே போதுமான சேமிப்பு கிடைக்கிறது. இன்னும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் இருக்காது. மின்சார உதவி தொழில்நுட்பத்தின் கீழ் ஜூபிடர் 55 கிமீ மைலேஜ் தருகிறது. மேலும் ஹூண்டாய் ஆக்டிவா லிட்டருக்கு 50 கிமீ மைலேஜ் தரும். 2024 டிவிஎஸ் ஜூபிடர் ரூ.73,700 (எக்ஸ்-ஷோரூம்) முதல், எச் ஸ்மார்ட் ஹோண்டா ஆக்டிவா ரூ.76,684ல் தொடங்குகிறது. மேலும் அதிகபட்ச விலை ரூ.82,684 வரை இருக்கும்.

குடும்பங்களுக்கு ஏற்ற மாருதியின் புதிய 7 சீட்டர் கார்.. விலை எவ்வளவு தெரியுமா?

Latest Videos

click me!