இதில் சென்டர் கன்சோல், டிரைவ் மோட் செலக்டர், வயர்லெஸ் சார்ஜர் மற்றும் நெக்ஸான் போன்ற ஸ்டார்ட்-ஸ்டாப் பட்டன் போன்ற அம்சங்கள் உள்ளன. டாடா கர்வ் இவி இரண்டு பேட்டரி பேக் உடன் கிடைக்கும். ஒன்று 502 கிமீ வரம்பில் 45 கிலோவாட் பேக், மற்றொன்று 585 கிமீ வரம்பைக் கொண்ட 55 கிலோவாட் பேக் ஆகும். 18 இன்ச் வீல்கள் மற்றும் 190 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் பெறுகிறது. இந்த வாகனத்தில் 500 லிட்டர் பூட் ஸ்பேஸும் உள்ளது.