Petrol Car : பெட்ரோல் கார்ல தெரியாம டீசல் போட்டுட்டா என்ன ஆகும்? உடனே என்ன செய்யணும் தெரியுமா?

Published : Aug 11, 2026, 12:30 PM IST

Petrol Car : பெட்ரோல் காரில் டீசல் ஊற்றினால் கார் ஓடுமா, ஓடாதா? என பலருக்கும் சந்தேகம் உண்டு. பெட்ரோல் காரில் டீசல் ஊற்றுவதால் என்ன மாதிரியான விளைவுகள் ஏற்படும் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

PREV
14
பெட்ரோல் காரில் டீசல் ஊற்றினால்?

பெட்ரோல் காரில் தற்செயலாக டீசல் ஊற்றுவது சில சமயங்களில் நடக்கும் தவறுதான். அதேபோல், பெட்ரோல் காரில் டீசல் ஊற்றினால் என்ன நடக்கும் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும் சிலருக்கு இருக்கும். ஆனால், பெட்ரோல் காரில் தற்செயலாக டீசல் ஊற்றப்பட்டால் காரை ஸ்டார்ட் செய்யாமல் இருப்பதே நல்லது.

பெட்ரோல் என்ஜினில் எரிபொருள் ஸ்பார்க் பிளக் மூலம் எரிகிறது. ஆனால், டீசல் வேறு விதமாக இயங்குகிறது. அதனால்தான் பெட்ரோல் டேங்கில் டீசல் கலந்தால் என்ஜின் சரியாக இயங்காது. கார் ஸ்டார்ட் செய்த பிறகு அதிகப்படியான புகை வருவது, என்ஜின் நடுங்குவது, பவர் குறைவது, மிஸ்பயர் ஆவது போன்ற சிக்கல்கள் ஏற்படும். ஆரம்பத்தில் கார் ஸ்டார்ட் ஆகி சற்று தூரம் ஓடினாலும், நடுவழியிலேயே நின்றுவிடும்.

இதையும் படிங்க : 350cc Bikes : வெறும் ₹1.38 லட்சத்தில் ஸ்டைலான பைக்குகள்! டெய்லி யூஸுக்கும் பெஸ்ட்!

24
இப்படி செய்யுங்கள்!

பெட்ரோல் காரில் தற்செயலாக டீசல் ஊற்றிவிட்டதை உடனே கண்டுபிடித்தால், கார் என்ஜினை ஒருபோதும் ஆன் செய்யாதீர்கள். இக்னிஷனை ஆன் செய்வதும்கூட சில சமயங்களில் எரிபொருளை என்ஜினை நோக்கி அனுப்ப வாய்ப்புள்ளது.

கார் நகர்த்த வேண்டிய சூழல் இருந்தால், இன்ஜினை ஸ்டார்ட் செய்யாமல் நியூட்ரலில் போட்டு பாதுகாப்பான இடத்திற்கு தள்ளி நகர்த்தலாம். அதன் பிறகு மெக்கானிக் அல்லது ரோட்சைட் அசிஸ்டன்ஸ் உதவியை நாடி, டேங்கில் உள்ள டீசலை முழுமையாக வெளியேற்ற வேண்டும்.

தேவைப்பட்டால் பியூவல் சிஸ்டத்தைச் சுத்தம் செய்து சரியான பெட்ரோலை நிரப்ப வேண்டும். என்ஜினை ஸ்டார்ட் செய்வதற்கு முன்பாகவே சிக்கலைக் கண்டுபிடித்தால் பெரிய சேதம் ஏதும் ஏற்படாது.

இதையும் படிங்க : Dishwasher : பாத்திரம் கழுவ கஷ்டமா? கம்மி செலவில் வீட்டிலேயே பாத்திரம் கழுவும் மெஷின் செய்யலாம்!

34
டீசல் கலந்தால் காரில் என்னென்ன பிரச்சனைகள் வரும்?

ஒருவேளை டீசல் ஊற்றிய பிறகு காரை இயக்கினால், டீசல் ஸ்பார்க் பிளக்குகள் மற்றும் ஃப்யூல் சிஸ்டத்தில் படிந்து, மிஸ்ஃபயர், அதிகப்படியான புகை, பவர் குறைதல், என்ஜின் நடுக்கம் அல்லது கார் நின்றுவிடுவது போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். தொடர்ந்து இயக்கினால், எரிபொருள் அமைப்பு மற்றும் உமிழ்வு கட்டுப்பாட்டு பாகங்களும் பாதிக்கப்படலாம்.

இதையும் படிங்க : Parasurama Rajayoga : 300 ஆண்டுகளுக்குப் பிறகு 6 கிரகங்களின் அணிவகுப்பு! கொட்டிக் கொடுக்கும் பரசுராம ராஜயோகம்!

44
டீசல் போட்டுவிட்டால் எவ்வளவு செலவு ஆகும்?

டீசல் ஊற்றியதும் காரை ஸ்டார்ட் செய்யாமல் இருந்தால், பொதுவாக டேங்கில் உள்ள தவறான எரிபொருளை வெளியேற்றி, தேவையான அளவு ஃப்யூல் சிஸ்டத்தைச் சுத்தம் செய்து சரியான பெட்ரோலை நிரப்புவது போதுமானதாக இருக்கலாம். ஆனால் காரை ஸ்டார்ட் செய்து ஓட்டியிருந்தால், ஸ்பார்க் பிளக், ஃப்யூல் ஃபில்டர், இன்ஜெக்டர் அல்லது பிற பாகங்களைச் சோதித்து சுத்தம் செய்ய வேண்டியிருக்கலாம். அதனால் செலவு காரை எவ்வளவு தூரம் இயக்கினோம், ஏற்பட்ட பாதிப்பு என்ன என்பதைப் பொறுத்து மாறும்.

இதையும் படிங்க : Almond : பாதாமை ஊற வைத்து சாப்பிடுறீங்களா? இதனால் உண்மையில் கூடுதல் பலன் கிடைக்குமா?

Read more Photos on
click me!

Recommended Stories