டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் தனது நவீன-ரெட்ரோ பைக்கான ரோனின் மாடலில், அகோண்டா எனும் புதிய ஸ்பெஷல் எடிஷனை அறிமுகப்படுத்தியுள்ளது. கோவாவின் அகோண்டா கடற்கரையை மையமாக வைத்து வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த பைக்.
டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் தனது பிரபலமான நவீன–ரெட்ரோ மோட்டார் சைக்கிளான டிவிஎஸ் Ronin-ன் புதிய ஸ்பெஷல் எடிஷனாக ரோனின் அகோண்டா எடிஷன் (Ronin Agonda Edition) மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய வேரியண்ட், MotoSoul 5.0 நிகழ்வில் வெளியிடப்பட்டது. ரோனின் மாடலை மையமாக வைத்து உருவாக்கப்படும் லிமிடெட் எடிஷன் பைக்குகளின் தொடக்கமாக இந்த அகோண்டா எடிஷன் பார்க்கப்படுகிறது.
24
டிவிஎஸ் ரோனின் புதிய மாடல்
இந்த பைக்கின் பெயரும், டிசைன் தீமுமானது கோவாவின் அகோண்டா கடற்கரை (அகோண்டா கடற்கரை)-யை உருவாக்கப்பட்டுள்ளது. அமைதியும், நம்பிக்கையும் கலந்த ஒரு வாழ்க்கை முறையை பிரதிபலிக்கும் வகையில் இந்த எடிஷன் இருப்பதாக டிவிஎஸ் தெரிவித்துள்ளது. வெள்ளை நிற அடிப்படையில், பழமையான தோற்றம் தரும் ஐந்து கோடு கிராஃபிக்ஸ் இந்த பைக்குக்கு தனித்துவமான லுக் கொடுக்கிறது. இந்த கோடுகள் பைக் முழுவதும் மென்மையாக சென்று, கனமான தோற்றமில்லாமல் லைட்டான, எலிகன்ட் ஸ்டைலை உருவாக்குகின்றன.
34
டிவிஎஸ் ரோனின் ஸ்பெஷல் எடிஷன்
வார நாட்களில் நகரப் பயணம், வார இறுதிகளில் கஃபே ரைடு அல்லது கடற்கரை பயணம் விரும்பும் ரைடர்களுக்கு இந்த டிசைன் நிச்சயம் பிடிக்கும். சாதாரண ரோனின் மாடல் மிட்நைட் ப்ளூ, க்லேசியர் சில்வர், கரி எம்பர் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. டிசைன் மாற்றங்களை தவிர, என்ஜின் மற்றும் அம்சங்களில் எந்த மாற்றமும் இல்லை.
பைக்கில் அசிமெட்ரிக் ஸ்பீடோமீட்டர், அட்ஜஸ்டபிள் லெவர், ஸ்லிப்பர் கிளட்ச், புளூடூத் கனெக்டிவிட்டி, கால்/எஸ்எம்எஸ் அலர்ட், SmartXonnect வசதி போன்றவை இடம்பெற்றுள்ளன. இந்த Ronin Agonda Edition-ல் 225.9cc ஒற்றை சிலிண்டர், ஆயில்-கூல்டு என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது 20.1 hp பவர் மற்றும் 19.93 Nm டார்க் உற்பத்தி செய்கிறது. 5-ஸ்பீட் கியர்பாக்ஸ் மூலம் பவர் பின்சக்கரத்திற்கு அனுப்பப்படுகிறது. இதன் விலை ரூ.1,30,990 (எக்ஸ்-ஷோரூம்) ஆகும்.