ஜப்பானைச் சேர்ந்த பிரபல வாகன தயாரிப்பாளர் டொயோட்டாவின் ஹிலக்ஸ் பிக்கப் டிரக், அதன் வலிமை மற்றும் நீடித்த உழைப்புத் தன்மைக்காக உலகம் முழுவதும் பெயர் பெற்றது. இப்போது, இந்த வாகனம் பாதுகாப்பு அம்சங்களிலும் தன்னை நிரூபித்துள்ளது. 2025 டொயோட்டா ஹிலக்ஸ், ஆஸ்திரேலியாவின் ANCAP கிராஷ் டெஸ்டில் சிறந்த செயல்திறனை வெளிப்படுத்தி, ஐந்து நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீட்டை பெற்றுள்ளது. இது வாகனத்தின் கட்டமைப்பு தரம் மற்றும் மேம்பட்ட பாதுகாப்பு தொழில்நுட்பத்தின் வலுவைக் காட்டுகிறது.
பெரியவர்களின் பாதுகாப்பு சோதனைகளில் ஹிலக்ஸ் சிறப்பான மதிப்பெண்களைப் பெற்றுள்ளது. மொத்தம் 40 புள்ளிகளில் 33.96 புள்ளிகளை பெற்ற இந்த பிக்கப் டிரக், 84 சதவீத பாதுகாப்பு மதிப்பெண் பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்பக்க ஆஃப்செட் மோதல், பக்கவாட்டு மோதல், போல் சோதனை, முழு முன்பக்க மோதல் மற்றும் விப்லாஷ் பாதுகாப்பு போன்ற பல்வேறு சோதனைகளில், ஹிலக்ஸின் வலுவான கட்டமைப்பு, சீட் பெல்ட் மற்றும் ஏர்பேக் அமைப்புகளும் திறம்பட செயல்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.