அடேங்கப்பா! 1.6 மில்லியன் விற்பனையா.. இந்த டிவிஎஸ் பைக்கில் அப்படி என்ன ஸ்பெஷல்?

Published : Sep 17, 2025, 09:49 AM IST

உள்நாடு மற்றும் ஏற்றுமதி சந்தைகளில் வலுவான வரவேற்பைப் பெற்றுள்ள இந்த பைக், டிவிஎஸ் (TVS)  நிறுவனத்தின் மொத்த விற்பனையில் 39% பங்களிப்பை வழங்கியுள்ளது.

PREV
15
16 லட்சம் யூனிட்ஸ் விற்பனை

இந்தியாவின் பிரபல இருசக்கர வாகன நிறுவனம் டிவிஎஸ் மோட்டார், தனது Raider 125 பைக் மூலம் புதிய சாதனையை பதிவு செய்துள்ளது. 2021 செப்டம்பர் மாதம் அறிமுகமான இந்த பைக், நான்கு ஆண்டுகளில் 16 லட்சத்துக்கும் மேற்பட்ட யூனிட்ஸ் விற்பனையை கடந்துள்ளது. இதன் மூலம் டிவிஎஸ் நிறுவனம் 125cc பிரிவில் வலுவான இடத்தை பிடித்துள்ளது.

25
டிவிஎஸ் ரைடர் 125

அறிக்கைகள் படி, ஆகஸ்ட் 2025 வரை டிவிஎஸ் Raider மொத்தம் 16,04,355 யூனிட்ஸ் விற்றுள்ளது. இதில் உள்நாட்டு சந்தையில் 13.5 லட்சம் யூனிட்ஸ் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஏற்றுமதியில் மட்டும் 2.45 லட்சம் யூனிட்ஸ் சென்றுள்ளன. குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், டிவிஎஸ் நிறுவனம் விற்ற மொத்தம் 35.2 லட்சம் மோட்டார் சைக்கிள்களில் 39 சதவீதம் பங்கு Raider 125க்கு சொந்தமானது.

35
பைக் விற்பனை

ஆண்டு வாரியான விற்பனைப் பதிவுகளும் சிறப்பாக உள்ளன. FY22 இல் 76,742 யூனிட்ஸ் விற்ற டிவிஎஸ் Raider, FY23 இல் 2,39,288 யூனிட்ஸ் விற்பனையை எட்டியது. FY24 இல் இந்த எண் இரட்டிப்பு ஆகி 4,78,443 யூனிட்சாக உயர்ந்தது. ஆனால் FY25 இல் 16% வீழ்ச்சி கண்டதால், விற்பனை 3,99,819 யூனிட்சாக குறைந்தது. எனினும், ஜூலை 2025 வரை 1,63,855 யூனிட்ஸ் விற்பனையானது மீண்டும் வளர்ச்சியைக் கண்டது.

45
Raider ஏற்றுமதி

ஏற்றுமதியிலும் Raider சிறப்பாக செயல்பட்டது. FY22 இல் 22,208 யூனிட்ஸ், FY23 இல் 60,982 யூனிட்ஸ் விற்றது. FY24 இல் 10% குறைந்து 54,577 யூனிட்ஸாக இருந்தாலும், FY25 இல் மீண்டும் முன்னேற்றம் கண்டு 71,341 யூனிட்ஸ் ஏற்றுமதி செய்யப்பட்டது. இதன் மூலம் உலக சந்தையிலும் Raider-க்கு நல்ல வரவேற்பு இருப்பது உறுதியாகிறது.

55
ரைடர் 125 விலை

பைக்கின் தொழில்நுட்ப அம்சங்களைப் பார்க்கும்போது, ​​ரைடர் 125-ல் 124.8cc, 3-வால்வ், சிங்கிள் சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 7,500 rpm-ல் 11 ஹெச்பி பவரையும், 6,000 rpm-ல் 11.75 Nm டார்க்கையும் வழங்குகிறது. விலை ரூ.87,625 (எக்ஸ்-ஷோரூம்) முதல் தொடங்குகிறது. அதனால், மிடில் கிளாஸ் பயனர்களுக்கான ஒரு கம்மி விலையில் நல்ல செயல்திறன் கொண்ட பைக் என இதை சொல்லலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories