டிவிஎஸ் iQube மின்சார ஸ்கூட்டர் இந்திய சந்தையில் 7 லட்சம் யூனிட் விற்பனை என்ற மாபெரும் சாதனையை படைத்துள்ளது. இது பஜாஜ் சேட்டக், ஏத்தர் ரிஸ்டா போன்ற மாடல்களுக்கு கடும் போட்டியை அளிக்கிறது.
இந்தியாவின் மின்சார இரு சக்கர வாகனத் துறையில் கடும் போட்டி நிலவிக் கொண்டிருக்கும் நிலையில், அதனை வெற்றிகரமாக எதிர்கொண்டு சாதனை படைத்த மாடல் டிவிஎஸ் ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகும். 2020 ஜனவரி மாதம் அறிமுகமான இந்த மின்சார ஸ்கூட்டர் தற்போது இந்திய சந்தையில் 7 லட்சம் யூனிட் விற்பனைச் சாதனையை கடந்துள்ளது. இந்த சாதனையை TVS மோட்டார் நிறுவனத்தின் நிதி அலுவலர் கே. கோபால தேசிகன் உறுதிப்படுத்தியுள்ளார். இது இந்தியாவில் மிகவும் பிரபலமான மின்சார ஸ்கூட்டராக திகழ்கிறது.
24
ஐக்யூப் விவரங்கள்
டிவிஎஸ் ஐக்யூப் மாடல் பல்வேறு வகைகளில் கிடைக்கிறது. 2.2kWh முதல் 5.3kWh வரை பேட்டரி திறன்களுடன் வருகிறது. இதன் டெல்லி நகரில் சாலை விலை ரூ.1.03 லட்சம் முதல் ரூ.1.73 லட்சம் வரை மாறுபடுகிறது. ஒவ்வொரு மாதலின் மைலேஜ் (IDC) 94 கி.மீ முதல் 212 கி.மீ வரை உள்ளது. இதில் 75 கி.மீ/மணி முதல் 82 கி.மீ/மணி வரை உச்ச வேகத்தை வழங்குகிறது. iQube ST மாடல் 5.3kWh பேட்டரியுடன் அதிகபட்சமாக 212 கி.மீ வரை ஓட்டமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
34
டிவிஎஸ் ஐக்யூப் பாதுகாப்பு வசதிகள்
இந்த மின்சார ஸ்கூட்டர் IP67 நீர் மற்றும் தூசி எதிர்ப்பு கொண்ட லித்தியம்-அயன் பேட்டரியுடன் வருகிறது. 4.4kW உச்ச சக்தி மற்றும் 140Nm உச்ச டார்க் அளிக்கும் ஹப்-மவுண்டட் BLDC மோட்டார் இதில் இணைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அம்சமாக ஒருங்கிணைந்த பிரேக்கிங் சிஸ்டம் (CBS), முன் டிஸ்க் மற்றும் பின் டிரம் பிரேக் அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. அதோடு, “பொருளாதாரம்” மற்றும் “பவர்” என இரு ரைட் மோடுகளும் உள்ளன. மேலும், ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி, நெவிகேஷன், திருட்டு எச்சரிக்கை, USB சார்ஜிங் போர்ட் போன்ற நவீன வசதிகளும் இணைக்கப்பட்டுள்ளன.
டிவிஎஸ் ஐக்யூப் 3.5kWh மாடலில் டியூபுலர் ஃப்ரேம், முன் டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷன், பின் ட்வின்-ஹைட்ராலிக் சஸ்பென்ஷன் வசதிகள் உள்ளன. 12-இன்ச் சக்கரங்கள், 90/90-12 டயர்கள், 1,805 மிமீ நீளம், 1,140 மிமீ உயரம், 157 மிமீ தரைத்தூக்கம் என சாலையில் நிலைத்தன்மையுடன் இயங்கும் வகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பேட்டரி 0 முதல் 80% வரை சார்ஜ் ஆக சுமார் 4 மணி 40 நிமிடங்கள் ஆகும். இதன் முக்கிய போட்டியாளர்கள் Bajaj Chetak, Ather Rizta, Ola S1 Pro, Honda Activa e: மற்றும் Hero Vida V2 ஆகியவை ஆகும்.