ஃபுல் டேங்க் நிரப்பினால்.. 700 கிமீ ரேஞ்ச் தரும் மைலேஜ் பைக்.. ரேட் ரொம்ப கம்மி

Published : Oct 27, 2025, 02:36 PM IST

டிவிஎஸ் ஸ்போர்ட் பைக், குறைந்த விலையில் சிறந்த மைலேஜ் தரும் ஒரு மாடலாகும். இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.55,100 ஆகவும், ஒரு லிட்டருக்கு 70 கிமீக்கு மேல் மைலேஜ் தருவதாகவும் நிறுவனம் கூறுகிறது.

PREV
13
டிவிஎஸ் ஸ்போர்ட் பைக்

தினசரி பயணங்களுக்கு குறைந்த செலவில் நல்ல மைலேஜ் தரும் பைக் தேடுகிறீர்களா? அப்படியானால் டிவிஎஸ் ஸ்போர்ட் (TVS Sport) ஒரு சிறந்த தேர்வு ஆகும். தற்போது ஜிஎஸ்டி குறைப்புக்குப் பிறகு இதன் விலையும் குறைந்துள்ளது. TVS Sport ES இன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.55,100.

23
டிவிஎஸ் ஸ்போர்ட் விலை

டெல்லியில் இதன் ஆன்-ரோடு விலை ரூ.66,948 வரை இருக்கும் (ஆர்டிஓ மற்றும் இன்ஷூரன்ஸ் உடன்). நகரம் மற்றும் டீலர் அடிப்படையில் விலை மாறலாம். ரூ.5,000 டவுன்பேமெண்ட் செலுத்தி, மீதமுள்ள ரூ.62,000க்கு மூன்று ஆண்டுகளுக்கு 9% வட்டியில் கடன் எடுத்தால், மாதம் ரூ.2,185 EMI ஆகும். இந்த பைக் ஒரு லிட்டருக்கு 70 கிமீக்கும் மேல் மைலேஜ் தருவதாக நிறுவனம் கூறுகிறது.

33
டிவிஎஸ் ஸ்போர்ட் அம்சங்கள்

முழு டேங்கில் 700 கிமீ வரை பயணம் செய்யலாம். முன்னால் டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்புறம் ட்வின் ஷாக் அப்சார்பர் என சிறந்த சஸ்பென்ஷன் அமைப்பு கொண்டது. மார்க்கெட்டில் இது Hero HF 100, Honda CD 110 Dream, Bajaj CT 110X போன்ற பைக்குகளுடன் போட்டியிடுகிறது. விலைக்கு ஏற்ற சிறந்த மைலேஜ் மாடலாக மாற்றியுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories