புதிய ஜிஎஸ்டி விதிகளால் கார் வரி குறைந்ததால், டாடா டியாகோ மற்றும் மாருதி வேகன் ஆர் கார்களின் விலை குறைந்துள்ளது. இந்த பண்டிகை சீசனில் டாடா டியாகோ மற்றும் மாருதி வேகனார் ஆகியவற்றில் எது மலிவு என்பதே பலரின் கேள்வி.
ஜிஎஸ்டி 2.0 புதிய விதிகள் செப்டம்பர் 22, 2025 முதல் அமலுக்கு வந்துள்ளன. இதன் மூலம் கார் வரி 28% இலிருந்து 18% ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் பல சிறிய கார்களின் விலை குறைந்துள்ளன. இந்த பண்டிகை சீசனில் டாடா டியாகோ மற்றும் மாருதி வேகன் ஆர் ஆகியவற்றில் எது மலிவு என்பதே பலரின் கேள்வி.
24
மாருதி வேகன் ஆர் விலை
மாருதி நிறுவனம் ஜிஎஸ்டி குறைப்புக்கு பின் WagonR விலையை குறைத்து, தற்போது ரூ.4.98 லட்சம் என அறிவித்துள்ளது. மாறாக, Tata Motors அதன் பிரபலமான Tiago விலையை ரூ.75,000 வரை குறைத்துள்ளது. இதனால் டியாகோ காரின் ஆரம்ப விலை ரூ.4.57 லட்சம் மட்டுமே. இரு கார்கள் குடும்பப் பயணங்களுக்கு பொருத்தமான சிறிய கார்கள் ஆகும்.
34
டியாகோ அம்சங்கள்
Tiago CNG மாடலில் 75.5 PS சக்தியும், 96.5 Nm டார்க்கும் உள்ளது. 242 லிட்டர் பூட் ஸ்பேஸ் மற்றும் 170 mm கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டது. WagonR காரில் 1.0L மற்றும் 1.2L என இரண்டு பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்கள் உள்ளன. இதன் CNG மாடல் 34 km/kg மைலேஜ் தருவதாக கூறப்படுகிறது.
மொத்தத்தில், விலை மற்றும் மைலேஜ் அடிப்படையில் Tata Tiago சிறிது மலிவு, ஆனால் WagonR எளிதான பராமரிப்பு மற்றும் நம்பகத்தன்மை காரணமாக இன்னும் அதிகம் விருப்பம் பெறுகிறது. ஜிஎஸ்டி குறைப்பு வாடிக்கையாளர்களுக்கு பெரும் நிவாரணமாக மாறியுள்ளது.