ரூ.15 லட்சத்திற்குள் வாங்கக்கூடிய டாப் 5 குறைந்த விலை மின்சார கார்கள் - முழு விபரம்

2023 உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, இந்தியாவில் ரூ.15 லட்சத்திற்கும் குறைவான விலையில் கிடைக்கும் முதல் 5 மின்சார கார்களின் பட்டியலை பார்க்கலாம்.

அதிகரித்து வரும் மாசுபாடு உலகளவில் மக்களுக்கு ஒரு பெரிய சவாலாக உள்ளது. மேலும் இந்த சிக்கலை எதிர்கொள்ள அரசாங்கங்கள் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. மின்சார வாகனங்கள் மாசுபாட்டைக் குறைக்கும். சுற்றுச்சூழலைக் காப்பாற்றுவதால் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு மாற்றாக  மின்சார வாகனங்களை வாங்குவதில் முனைப்பு காட்டுகின்றனர்.

இந்தியாவில் இரு சக்கர வாகனங்கள் கடந்த சில ஆண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சியைக் கண்டுள்ளன. மின்சார காரின் அதிக விலை அதிகமாக இருப்பது விற்பனை மந்தத்துக்கு காரணமாக சொல்லப்படுகிறது. கடந்த சில மாதங்களாக எலெக்ட்ரிக் கார் விற்பனை அதிகரித்து வருகிறது. 2023 ஆம் ஆண்டு உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, ரூ.15 லட்சத்திற்கும் குறைவான விலையில் சிறந்த 5 கார்களை பற்றி காண்போம்.


எம்ஜி காமெட் ஈ.வி (MG Comet EV)

MG Comet EV என்பது மூன்று - கதவு கொண்ட மின்சார நகர கார் ஆகும். இது MG ZS EVக்குப் பிறகு MG மோட்டார் இந்தியாவின் இரண்டாவது EV ஆகும். MG Comet EV என்பது இந்தோனேசிய சந்தையில் விற்கப்படும் ரீபேட்ஜ் செய்யப்பட்ட Wuling Air EV ஆகும். காமெட் EV ஆனது 25-kWh பேட்டரி பேக் மற்றும் 50 kW மோட்டாருடன் வருகிறது.

ஒருமுறை சார்ஜ் செய்தால் 200 கிமீக்கு மேல் ஓட்டும் திறன் கொண்டது. MG Comet EV ஆனது ரூ. 8 லட்சத்திற்கும் குறைவான விலையில் உள்ளது. இது இந்தியாவில் மிகவும் மலிவு விலையில் கிடைக்கும் மின்சார கார் ஆகும். இது இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் இன்ஃபோடெயின்மென்ட் சென்டருக்கான இரட்டை 10.25-இன்ச் டிஜிட்டல் டிஸ்ப்ளே மற்றும் இணைக்கப்பட்ட கார் தொழில்நுட்பம் போன்ற பிரீமியம் அம்சங்களையும் பெறுகிறது.

டாடா டியாகோ EV (Tata Tiago EV)

Tata Tiago EV ஆனது ரூ. 8.49 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையுடன் ஆரம்பமாகிறது. இந்தியாவில் மிகவும் மலிவு விலையில் இரண்டாவது எலெக்ட்ரிக் கார் ஆகும். இது அடிப்படையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தை கொண்டுள்ளதால் நம்பி வாங்கலாம். ICE கார்களின் வழக்கமான தோற்றம் மற்றும் EV களின் பலன் ஆகியவற்றால், நிறைய பேர் டாடா மின்சார வாகனங்களை வாங்குகிறார்கள்.இந்த கார் ஒருமுறை சார்ஜ் செய்தால் 315 கிமீ தூரம் வரை செல்லும்.

சிட்ரோயன் சி3 ஈ.வி (Citroen C3 EV)

இந்தியாவில் பிரெஞ்சு பிராண்டின் முதல் எலக்ட்ரிக் காரான சிட்ரோயன் சி3 எலக்ட்ரிக் கார், முதல் எலக்ட்ரிக் சப்-  காம்பாக்ட் எஸ்யூவி ஆகும். இது சிட்ரோயன் C3 ICE பதிப்பைப் போலவே உள்ளது. C3 ஐ விட சில கூடுதல் அம்சங்கள், அதாவது க்ரூஸ் கண்ட்ரோல், ரியர் வைப்பர் மற்றும் வாஷர் மற்றும் தானியங்கி காலநிலை கட்டுப்பாடு போன்றவை உள்ளது. இது 350 கிமீ ரேஞ்சுக்கு செல்லும். இது ரூ. 11.50 லட்சத்தில் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது, இது இந்தியாவில் மிகவும் மலிவு விலையில் கிடைக்கும் எலக்ட்ரிக் எஸ்யூவிகளில் ஒன்றாகும்.

டாடா டிகோர் EV (Tata Tigor EV)

இந்த காரின் விலை 12.49 லட்ச ரூபாய் ஆகும். காம்பாக்ட் செடான் டியாகோ EV இருக்கிறது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 312 கிமீ ஓடுகிறது. வாடிக்கையாளர்களை கவரும் வகையில் டீல் ப்ளூ போன்ற நிறங்களுடன் வருகிறது.

டாடா நெக்ஸான் EV (Tata Nexon EV)

Tata Nexon EV ஆனது உலகின் முதல் உயர் மின்னழுத்த இந்திய மின்சார வாகனம் ஆகும். அதுமட்டுமில்லாமல், இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் மின்சார கார் ஆகும். இது தற்போது Tata Nexon EV பிரைம் என விற்பனை செய்யப்படுகிறது. அதே நேரத்தில் Tata Nexon EV Max பதிப்பும் உள்ளது. 14.99 லட்சம் ஆரம்ப விலையில், Nexon EV இந்தியாவில் மிகவும் பிரபலமான எலக்ட்ரிக் SUV ஆகும். 10 வினாடிகளுக்குள் 0 முதல் 100 கிமீ/மணி வரை வேகமடைகிறது.

இந்தியாவில் டெஸ்லா தொழிற்சாலை வருவது எப்போது? எலான் மஸ்க் சொன்ன குட் நியூஸ்!

Latest Videos

click me!