மலிவு விலை.! பட்டையை கிளப்பும் அம்சங்கள்.! நானோ மாடலில் வரும் எம்ஜி கோமெட் இவி

First Published | Mar 14, 2023, 9:56 AM IST

ஆஸ்டர், ஹெக்டர், க்ளோஸ்டர் மற்றும் ZS EVக்குப் பிறகு இந்தியாவில் எம்ஜியின் ஐந்தாவது மாடலாக கோமெட் இவி வெளியாக இருக்கிறது.

எம்ஜி மோட்டார் இந்தியா தனது வரவிருக்கும் தன்னுடைய மலிவு விலை  மின்சார வாகனத்தின் (EV) பெயரை சமீபத்தில் வெளியிட்டது. அதன் பெயர் எம்ஜி கோமெட் ஆகும். எம்ஜி கோமெட்டின் முழு விபரம் இன்னும் வெளியாகவில்லை என்றாலும், வாகனத்தைப் பற்றி தற்போது வெளியாகி உள்ள சில அம்சங்களை பற்றி பார்க்கலாம்.

எம்ஜி கோமெட் இவி (MG Comet) இந்தியாவில் 2023 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அநேகமாக ஏப்ரல் மாதத்தில் தொடங்கப்படும். கோமெட் இவியை எம்ஜி நிறுவனம் மலிவு விலையில் அறிமுகப்படுத்த உள்ளோம் என்று கூறியுள்ள நிலையில்,  எம்ஜி கோமெட் இவியின் விலை ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க..ராயல் என்ஃபீல்டுக்கு ஆப்பு வைத்த ஹோண்டா.. 2023 ஹைனெஸ் சிபி350 மாடலில் ஸ்பெஷல் என்ன தெரியுமா?

Tap to resize

எம்ஜி கோமெட் இவி இவியானது மூன்று கதவுகள் கொண்டிருக்கும். இது அடிப்படையில் ரீபேட்ஜ் செய்யப்பட்ட Wuling Air EV ஆகும். இது ஏற்கனவே இந்தோனேசிய சந்தையில் விற்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.  இது எல்இடி ஹெட்லைட்கள் மற்றும் எல்இடி டெயில்லைட்களுடன் முழு - எல்இடி லைட்டிங் செட் - அப் உடன் வரும். இது 13 அங்குல சக்கரங்களை கொண்டது. 

கேபினுக்குள், எலக்ட்ரிக் கார் 10.25 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் 10.25 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் போன்ற அம்சங்களைக் கொண்டிருக்கும். இணைக்கப்பட்ட கார் தொழில்நுட்பமும் இருக்கும். எம்ஜி கோமெட் இவி(MG Comet) ஆனது 25kWh பேட்டரியுடன் 50kW மோட்டாரை இணைக்கலாம். ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் இதன் வரம்பு 250 கி.மீக்கு அருகில் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

எம்ஜி கோமெட் இவி ஆனது Tata Tiago.ev மற்றும் Citroen e-C3 போன்றவற்றுக்கு போட்டியாக இருக்கும். Tata Tiago.ev ரூ. 8.69 லட்சம் முதல் ரூ. 11.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் உள்ளது, சிட்ரோயன் இ-சி3 ரூ. 11.50 லட்சம் முதல் ரூ. 12.43 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் உள்ளது. சமீபத்தில் ஹெக்டர் 2023, க்ளோஸ்டர் மற்றும் ZS EV அறிமுகப்படுத்தப்பட்ட ஆஸ்டருக்குப் பிறகு இந்தியாவில் MG இன் ஐந்தாவது மாடலாக எம்ஜி கோமெட்டாக இருக்கும்.

இதையும் படிங்க..Hyundai : கார் வாங்க போறீங்களா.? விலை குறையுது தெரியுமா?.. உங்களுக்கான குட் நியூஸ்.. முழு விபரம் உள்ளே

Latest Videos

click me!