இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் செடான் கார்கள்!

First Published | Mar 3, 2023, 2:25 PM IST

ஹோண்டாய் சிட்டி கூட தள்ளி நிற்கும் வகையில் ஹோண்டாய் நிறுவனம் புதிய மாடல் கார்களை அறிமுகம் செய்துள்ளது.
 

எஸ்யுவி வகை கார்

காற் உற்பத்தி நிறுவனங்கள் பெரும்பாலும் எஸ்யுவி வகை கார்களில் அதிக கவனம் செலுத்தி வருகின்றன. ஸ்கோடா ஸ்லேவியா, விடபிள்யூ விர்ஜூஸ் செடான்கள் அறிமுகப்படுத் தப்பட்டதன் மூலமாக செடான் கார்கள் மீண்டும் சந்தைகளில் அதிகளவில் விற்பனைக்கு வரத் தொடங்கியுள்ளன. வாடிக்கையாளர்களிடம் செடான் கார்களுக்கு இருக்கும் வரவேற்பைத் தொடர்ந்து இந்த ஆண்டு வரவிருக்கும் டாப் 4 செடான்கள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
 

ஹோண்டா சிட்டி ஃபேஸ்லிஃப்ட் அறிமுகம்:

ஹோண்டா சிட்டி தற்போது ஃபேஸ்லிஃப்ட் மாடலை சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த மாடல் ரூ.11 லட்சத்து 49 ஆயிரம் முதல் ரூ.20 லட்சத்து 39 ஆயிரம் வரையில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாடலில் முன்புற பம்பர்கள், பின்புற பம்பர்கள், அலாய் வீல்ஸ் மற்றும் புதிய கலர் ஆப்ஷன்கள் ஆகியவை கொண்டு வரப்பட்டுள்ளன. 

Latest Videos


ஹோண்டா சிட்டி ஃபேஸ்லிஃப்ட் அறிமுகம்:

புதிய ஹோண்டா சிட்டி காரானது 119 பிஎச்பி பவர், 145 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் என்ஏ பெட்ரோல் எஞ்சின் மூலம் இயக்கப்படும். அதே நேரம் செடானின் ஹைபிரிட் வேரியன்ட்1.5 லிட்டர் அட்கின்சன் சைக்கிள் பெட்ரோல் எஞ்சின் மூலம் இயக்கப்படும். இது 124 பிஎச்பி ஆற்றலையும் 253 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும்.

மெர்சிடிஸ் பென்ஸ் ஏ-கிளாஸ்:

கடந்த 2020 ஆம் ஆண்டு மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனம் ஏ கிளாஸ் செடானை அறிமுகம் செய்தது. தற்போது இந்த ஏ கிளாஸ் செடான் புதிய ஃபேஸ்லிப்ஃட் பெற்றுள்ளது. இதில், முன்பக்க பம்பர், எல்இடி ஹெட்லேம்ப்ஸ், புதிய அலாய் வீல்கள் உள்ளன.

மெர்சிடிஸ் பென்ஸ் ஏ-கிளாஸ்:

இந்த மாடலின் இன்ஃபோடெயின் மென்ட் சிஸ்டம் புதிய MBUX UI மற்றும் Finger Print Scanner உண்டு. இது தவிர Auto Emergency Breaking, Auto break Asist போன்ற டிரைவர்-அசிஸ்டென்ஸ் அம்சங்களையும் உள்ளடக்கியுள்ளது. 2.0- லிட்டர் டர்போ டீசல் மற்றும் 1.3-லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின்கள் இரட்டை கிளட்ச் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டிருக்கும்.
 

வால்வோ எஸ்60 ஃபேஸ்லிஃப்ட்:

வால்வோ எஸ்60 வகை மாடலை அறிமுகம் செய்துள்ளது. இது புதிய அம்சங்களுக்கான காஸ்மெட்டிக் மேம்பாடுகளுடன் சந்தைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த காரில் கூகுள் மேப்ஸ், கூகுள் ப்ளே ஸ்டோர், கூகுள் அசிஸ்டண்ட் ஆகியவை கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளன. இந்த வகை மாடலில் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மூலம் இயக்கப்படும்.

2023 ஹூண்டாய் வெர்னா:

ஹூண்டாய் நிறுவனம் சந்தையில் புதிய வெர்னா கார் ஒன்றை வரும் 21 ஆம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது. தற்போது உள்ள வெர்னா காரைக் காட்டிலும் நீளமானதாகவும், அளவில் பெரியதாகவும் கொண்டு வரப்பட உள்ளது. முன் மற்றும் பின் சக்கரங்களுக்கு இடையிலான தூரம் 70 மிமீ ஆகும். புதிய வெர்னா 1.5 லிட்டர் VTVT பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் CRDI டர்போ டீசலுடன் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 

click me!