Bajaj Pulsar 220F: திரும்பி வந்துட்டேனு சொல்லு..! இளைஞர்களை இழுத்த Pulsar 220F மீண்டும் விற்பனை! விலை தெரியுமா

First Published | Mar 1, 2023, 11:34 AM IST

பஜாஜ் நிறுவனம் கடந்த ஆண்டு நிறுத்தி பல்சர் 220F மாடலை ஓர் ஆண்டுக்குப்பின் மீண்டும் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.

இளைஞர்களின் பைக்

பஜாஜ் நிறுவனம் இளைஞர்களை கவர்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட பைக்களில் முக்கியமானது பல்சர். அதிலும் பல்சர் 220F பைக்குகள் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப்பெற்றன. ஆனால், பஜாஜ் நிறுவனம்  பல்சர் N250 மற்றும் F250 ஆகிய இரு மாடல்களை அறிமுகம் செய்தபின், திடீரென கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நிறுத்தப்பட்டது.

விலை என்ன

பஜாஜ் நிறுவனம் மீண்டும் பல்சர் 220F பைக்கை அறிமுகம் செய்துள்ளது. இந்த பல்சர் 220எப் விலை எக்ஸோரூமில் ரூ.1,39,786 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


பல்சர் 220F மாடல் திடீர் நிறுத்தம்

கடந்த 2007ம் ஆண்டு பஜாஜ் 200F முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்டு, இளைஞர்கள் மத்தியில் சக்கைபோடு போட்டது. 16 ஆண்டுகளாகிய நிலையில் திடீரென இந்த மாடலை பஜாஜ் நிறுவனம் நிறத்தியது.

பஜாஜ் 220F மாடல் பைக்கை மறுவடிவமைப்பு செய்யவும், செயல்திறனைக் கூட்டவும் இடைவெளி கொடுத்து மீண்டும் சந்தையில் பஜாஜ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
 

எப்போது விற்பனை

பல்சர் 220F பைக்குகள் OBD-2 compliance பெற்றுள்ளது. முன்பு விற்கப்பட்ட பிஎஸ்6 மாடல் போன்று இருக்கும். இந்த மாதத்தின் இறுதியில் பல்சர் 220F விற்பனைக்கு வரும் எனத் தெரிகிறது. 

பல்சர் 220f மறுவடிவமைப்பு

2023 மறுவடிவமைப்புடன் அறிமுகமாகும் பல்சர் 220F பைக்குகள் விலை ஆன்-ரோடு ரூ.170 லட்சம் முதல் ரூ.1.75 வரை இருக்கும். பல்சர்250F மாடல் ரூ.1.40 லட்சம்வரை இருக்கிறது. 220F பல்சர் விலையும் அதைஒத்து இருக்கும்
 

Latest Videos

click me!