8000mAh பேட்டரி.. நத்திங்கை மிஞ்சும் அம்சம்.. ஜூன் 11-ல் களமிறங்கும் டெக்னோ போவா 8

Published : Jun 07, 2026, 02:11 PM IST

Tecno Pova 8: டெக்னோ போவா 8 ஸ்மார்ட்போன் ஜூன் 11-ம் தேதி இந்தியாவில் அறிமுகமாகிறது. 8,000mAh பேட்டரி மற்றும் புதிய டாட் லைட்டிங் அம்சம் இந்த போனின் முக்கிய சிறப்பம்சங்களாக இருக்கின்றன.

PREV
14
இந்தியாவில் களமிறங்கும் டெக்னோ போவா 8

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் பட்ஜெட் மற்றும் மிட்-ரேஞ்ச் பிரிவில் போட்டி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த சூழலில், டெக்னோ தனது புதிய போவா 8 ஸ்மார்ட்போனை ஜூன் 11-ஆம் தேதி அறிமுகப்படுத்தியதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிளிப்கார்ட் வழியாக இந்த சாதனம் விற்பனைக்கு வரவுள்ளது.

24
8000mAh பேட்டரி தான் ஹைலைட்

இந்த போனின் மிகப்பெரிய பலமாக 8,000mAh திறன் கொண்ட பேட்டரி பார்க்கப்படுகிறது. தொடர்ந்து கேமிங், வீடியோ ஸ்ட்ரீமிங் மற்றும் சமூக வலைதள பயன்பாட்டில் ஈடுபடுபவர்களை குறிவைத்து இந்த அம்சம் வழங்கப்பட்டுள்ளது. நீண்ட நேர பேட்டரி பேக்கப் தேடும் பயனர்களுக்கு இது ஒரு முக்கிய தேர்வாக அமையலாம்.

34
டிசைனில் புதிய முயற்சி

டெக்னோ போவா 8-ன் பின்புற வடிவமைப்பு கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது. குறிப்பாக கேமரா பகுதியை சுற்றி வழங்கப்பட்டுள்ள மெட்ரிக்ஸ் ஸ்டைல் ​​டாட் லைட்டிங் அமைப்பு, சாதனத்திற்கு தனித்துவமான தோற்றத்தை வழங்குகிறது. நோட்டிஃபிகேஷன்கள் மற்றும் முக்கிய தகவல்களை திரையை திறக்காமலே அறிய உதவும் வகையில் இந்த அம்சம் செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

44
செயல்திறனில் என்ன எதிர்பார்க்கலாம்?

கசிந்த தகவல்களின்படி, இந்த போனில் MediaTek Dimensity 7100 சிப்செட், ஆண்ட்ராய்டு 16, 45W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5G ஆதரவு இடம்பெற்றுள்ளது. 6GB+128GB, 8GB+128GB மற்றும் 8GB+256GB என பல்வேறு ஸ்டோரேஜ் விருப்பங்களும் வரக்கூடும். விலை மற்றும் முழுமையான அம்சங்கள் அதிகாரப்பூர்வ அறிமுக நிகழ்வில் வெளியாக உள்ளன. இருப்பினும், பேட்டரி திறனை மையமாகக் கொண்டு டெக்னோ போவா 8 இந்திய சந்தையில் கவனிக்கத்தக்க சாதனமாக மாறும் என தொழில்நுட்ப வட்டாரங்கள் கருதுகின்றன.

Read more Photos on
click me!

Recommended Stories