Best Selling Tata Car: டாடா மோட்டார்ஸ் விற்பனையில் மே 2026-ல் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்துள்ளது. குறிப்பாக ஒரு மாடல் 20,000-க்கும் அதிகமான யூனிட்கள் விற்பனையாகி போட்டியாளர்களை பின்னுக்குத் தள்ளியுள்ளது.
இந்திய கார் சந்தையில் மே 2026 ஆம் ஆண்டு டாடா மோட்டார்ஸுக்கு சிறப்பான மாதமாக அமைந்துள்ளது. மாடல் வாரியான விற்பனை விவரங்களைப் பார்க்கும்போது, டாடா பஞ்ச் விற்பனையில் முன்னிலை வகித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. கடந்த மாதம் மட்டும் 20,208 யூனிட்கள் விற்பனையாகி, கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 54 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
25
நெக்ஸானும் வலுவான வளர்ச்சி
டாடாவின் மற்றொரு பிரபலமான மாடலான நெக்ஸான், 19,100 யூனிட்கள் விற்பனையுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இது 46 சதவீத ஆண்டு வளர்ச்சியைக் காட்டுகிறது. புதிய தலைமுறை எஸ்யூவி வாங்குபவர்களின் ஆர்வம் தொடர்ந்து அதிகரித்து வருவதை இந்த எண்ணிக்கை வெளிப்படுத்துகிறது.
35
ஹாரியர் கொடுத்த அதிர்ச்சி
விற்பனை வளர்ச்சியில் மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியது ஹாரியர். இந்த எஸ்யூவி 215 சதவீத வளர்ச்சியுடன் 2,815 யூனிட்கள் விற்பனையாகியுள்ளது. மறுபுறம், டியாகோ, கர்வ், டிகோர் போன்ற சில மாடல்கள் விற்பனை சரிவை சந்தித்துள்ளன. இது வாடிக்கையாளர்களின் விருப்பம் எஸ்யூவி பிரிவை நோக்கி மாறி வருவதை சுட்டிக்காட்டுகிறது.
ரூ.5.64 லட்சம் ஆரம்ப விலையில் கிடைக்கும் டாடா பஞ்ச், பாதுகாப்பு மற்றும் வசதிகளின் சமநிலையை வழங்குகிறது. 5-ஸ்டார் பாதுகாப்பு மதிப்பீடு, டஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட், க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் பல நவீன அம்சங்கள் இதன் பலமாக உள்ளன.
55
பாதுகாப்பு + மைலேஜ் = வெற்றி
1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் கொண்ட இந்த மைக்ரோசாஃப்ட் எஸ்யூவி, பெட்ரோல் பதிப்பில் 20.09 கிமீ மற்றும் CNG பதிப்பில் 26.99 கிமீ வரை மைலேஜ் வழங்குகிறது. பாதுகாப்பு, விலை, மைலேஜ் மற்றும் பிராண்ட் நம்பிக்கை ஆகிய நான்கு அம்சங்களின் கலவையே டாடா பஞ்சை இந்திய சந்தையின் தற்போதைய விற்பனை சாம்பியனாக மாறியுள்ளது.