டாடா நானோவுக்கு பிறகு ஹிட் அடித்த கார்.. ஸ்விஃப்ட்டுக்கு போட்டி.. விலை ரொம்ப கம்மி

Published : Nov 17, 2025, 02:39 PM IST

சிறந்த மைலேஜ், பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் பிரீமியம் இன்டீரியர் ஆகியவற்றுடன், இது மாருதி ஸ்விஃப்ட்டுக்கு ஒரு வலுவான போட்டியாக இந்த டாடா கார் விளங்குகிறது. இதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் பற்றி பார்க்கலாம்.

PREV
15
டாடா கார்

டாடா நானோ இந்தியாவில் அறிமுகமானபோது பெற்ற வரவேற்பு அறிந்த ஒன்று. அதே உற்சாகத்தை மீண்டும் உருவாக்கும் வகையில் டாடா டியாகோ தற்போது சந்தையில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. சிறிய குடும்பங்களுக்கு ஏற்றது, விலைச் சிக்கனமுள்ளது, அதேசமயம் பாதுகாப்பு தரத்திலும் நம்பிக்கை தரும் கார் என்பதால் பலரின் விருப்பப்பட்டியலில் இடம்பிடித்துள்ளது.

25
விலை விவரங்கள்

டாடா டியாகோ என்ஆர்ஜியின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.7.30 லட்சம் முதல் ரூ.8.85 லட்சம் வரை உள்ளது. மாருதி ஸ்விஃப்டுடன் ஒப்பிடும்போது, ​​விலைப்போட்டியில் டியாகோ நல்ல நிலையைப் பிடித்துள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும் வரி மற்றும் கட்டணங்களின் அடிப்படையில் விலை சற்று மாறுவதால், வாங்குபவர்கள் தங்கள் நகர விலையையும் சரிபார்த்து வாங்குகிறார்கள் அவசியம்.

35
மைலேஜில் பெரும் முன்னிலை

டாடா டியாகோ நீண்ட பயணங்களில் சிக்கனத்தை விரும்புபவர்களுக்கு ஏற்ற கார். பெட்ரோல் மாடலில் 20.09 கிமீ/லிட்டர், சிஎன்ஜி மாடலில் 26.49 கிமீ/கிலோ வரை மைலேஜ் தருகிறது. அதேசமயம், டாடா கார்கள் பொதுவாக பாதுகாப்பு அம்சங்களில் முன்னிலை வகிப்பதால், தினசரி பயணத்திற்கும் குடும்பத்திற்கும் இது ஒரு நம்பகமான தேர்வாக மாறுகிறது.

45
ஸ்விஃப்டியிலிருந்து வேரியண்ட்

மாருதி ஸ்விஃப்டுடன் டியாகோவை ஒப்பிட்டால், வடிவமைப்பில் மிகப்பெரிய வேறுபாடு உள்ளது. டாடா, டியாகோ NRG-ஐ ஒரு கிராஸ்-ஹெட்ச்பேக் வடிவமைப்பை உருவாக்கியுள்ளது. NRG என்றால் Naturally Rough and Going. அதனால், இது ஒரு சாதாரண ஹேட்ச்பேக் அல்ல; மினி எஸ்யூவி தோற்றத்தையும் கொண்டுள்ளது. உயர்ந்த தரை இடைவெளி, தடிப்பான பிளாஸ்டிக் கில்லாடிங் போன்றவை அதற்கு ரக்கட் லுக் தருகின்றன.

55
லக்சுரி இன்டீரியர் + பிரீமியம் டெக் அம்சங்கள்

இந்த மாடலின் கேபினில் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இப்போது இன்டீரியர் மேலும் பிரீமியம் தோற்றத்துடன் வருகிறது. பெரிய டச் ஸ்கிரீன், மேம்படுத்தப்பட்ட டாஷ்போர்டு ஆகியவை காருக்குள் உட்காரும் போதே ஒரு சிறந்த முதல் எண்ணம் தருகின்றன. மொத்தத்தில், டாடா டியாகோ பாரம்பரிய ஹேட்ச்பேக்குகளிலிருந்து வித்தியாசமானது. ஸ்டைலும் பாதுகாப்பும் ஒன்றாக தேடுபவர்களுக்கு இது ஒரு சரியான கார் ஆகும்.

Read more Photos on
click me!

Recommended Stories