இந்தியாவில் யமஹா எக்ஸ்எஸ்ஆர் 155 பைக்கின் டெலிவரி அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது. இந்த பைக், கிளாசிக் நியோ-ரெட்ரோ டிசைன், R15/MT-15-ல் உள்ள அதே சக்திவாய்ந்த 155cc என்ஜின், டூயல்-சேனல் ஏபிஎஸ் போன்ற நவீன பாதுகாப்பு அம்சங்களுடன் வருகிறது.
இந்தியாவில் யமஹா எக்ஸ்எஸ்ஆர் 155 (XSR 155) பைக்கின் டெலிவரி அதிகாரப்பூர்வமாக தொடங்கிவிட்டது. ரூ.1.50 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் அறிமுகமான இந்த பைக், யமஹாவின் லைன்அப்பில் மிகவும் வித்தியாசமான ஒன்றாக உள்ளது. புதிய ஈரோக்ஸ் e, EC-06 போன்ற எலக்ட்ரிக் மாடல்களை அறிமுகப்படுத்திய பின்னர், பெட்ரோல் பிரியர்களுக்கான சிறப்பு விருப்பமாக XSR 155 வந்துள்ளது. எலெக்ட்ரிக், பெட்ரோல் என எல்லா வகை ரைடர்களையும் கவரும் வகையில் யமஹா தனது தயாரிப்புகளை விரைவாக விரிவுபடுத்துகிறது.
24
கிளாசிக் லுக் + மாடர்ன் டெக்
XSR 155-ன் மிகப்பெரிய அம்சம் அதன் நியோ-ரெட்ரோ டிசைன் ஆகும். பழமையான பைக் ஸ்டைலையும், இன்றைய தொழில்நுட்பத்தையும் சேர்த்து உருவாக்கிய மிக அழகான வடிவமைப்பு இதன் USP. ரவுண்ட் LED ஹெட்லெம்ப், அதே முறையில் வட்ட LED டெயில் லைட், நீளமான 'tedrop' ஃபியூஎல் டேங்க்-அனைத்தும் ஒரு விண்டேஜ் அழகைக் கொடுக்கிறது. கிளாசிக் தோற்றமும், சுகமான ரைடிங் அனுபவமும் கொடுக்கிறது.
34
மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்கள்
இது வெறும் அழகுக்கான பைக் மட்டும் அல்ல. யமஹா இதில் மாடர்ன் அம்சங்களை முழுமையாகச் சேர்த்துள்ளது. முழு LED லைட்டிங், டூயல்-சேனல் ஏபிஎஸ், இழுவைக் கட்டுப்பாட்டு அமைப்பு, ஸ்மார்ட்போன் இணைப்புடன் Yamaha Motorcycle Connect போன்ற அம்சங்கள் உள்ளன. புதிய ரைடர்களுக்கும், அனுபவம் உள்ள ரைடர்களுக்கும் பொருந்தும் வகையில் பாதுகாப்பும், செயல்திறனும் சமநிலையாக உள்ளது. எந்த சாலையிலும் பாதுகாப்பான பிரேக்கிங்கை வழங்குவது dual-channel ABS மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
XSR 155-ல் உள்ள 155cc திரவ-குளிரூட்டப்பட்ட என்ஜின், R15 மற்றும் MT-15-ல் பயன்படுத்தப்படும் அதே பவர்ஃபுல் இன்ஜின். இது 18.4 HP பவர் மற்றும் 14.1 Nm டார்க் வழங்குகிறது. 6-வேக கியர்பாக்ஸ் உடன் வரும் இந்த பைக், ரெட்ரோ லுக்கில் இருந்தாலும் செயல்திறனில் ஒரு நவீன ஸ்போர்ட்ஸ் பைக் போலவே இருக்கும். இந்தியா முழுவதும் டெலிவரிகள் தொடங்கியுள்ள நிலையில், கிளாசிக் லுக்கையும், கச்சிதமான மாடர்ன் செயல்திறன்-னையும் விரும்பும் ரைடர்களின் விருப்பப்பட்டியலில் XSR 155 முன்னிலை பெறுவது உறுதி என்றே கூறலாம்.