127 கிமீ சேடக் ரேஞ்சா? 100 கி.மீ iQube ஆ? எது சிறந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்?

Published : Nov 17, 2025, 11:26 AM IST

பஜாஜ் சேடக் 3001 மற்றும் டிவிஎஸ் ஐக்யூப் 2.2 kWh ஆகிய இரண்டு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விலை, செயல்திறன், ரேஞ்ச் மற்றும் ஸ்மார்ட் அம்சங்களை விரிவாக இந்த கட்டுரையில் பார்க்கலாம். சிறந்த ஸ்கூட்டரை வாங்க இது உங்களுக்கு உதவும்.

PREV
14
பஜாஜ் சேடக் vs டிவிஎஸ் ஐக்யூப்

பெட்ரோல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து இருக்க, பெரிய நகரங்களில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வேகமாக பிரபலமாகிக் கொண்டிருக்கிறது. அலுவலகம் செல்ல, கல்லூரி, ஷாப்பிங்-எல்லா செயல்களுக்கும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் ஒரு சிக்கனமாக மாறியுள்ளது. இந்த பிரிவில் அதிகமாக பேசப்படும் இரண்டு மாடல்கள் பஜாஜ் சேடக் 3001 மற்றும் டிவிஎஸ் ஐக்யூப் 2.2 kWh ஆகும். இரண்டும் ஸ்டைலிஷ் லுக், ஸ்மார்ட் அம்சங்கள் மற்றும் தினசரி பயணத்துக்கான சிறந்த ரேஞ்ச் கொண்டவை.

24
பட்ஜெட்டில் எது சரியானது?

விலையைப் பற்றி பார்க்கும்போது, ​​பஜாஜ் சேடக் 3001-ன் எக்ஸ்-ஷோரூம் விலை சுமார் ரூ.99,990. இதை ஒப்பிடுகையில், டிவிஎஸ் ஐக்யூப் 2.2 kWh சற்று மலிவானது, இது ரூ.94,434 முதல் கிடைக்கிறது. விலை குறைவாக எடுத்துக் கொள்ளும் பயனர்களுக்கு ஐக்யூப் சிறந்த தேர்வு. மேலும், சில மாநிலங்களில் மின்சார வாகனங்களுக்கு மானியம் கிடைப்பதால், உங்கள் மாநிலத்தில் உள்ள சலுகைகளை சரிபார்த்து வாங்குவது நன்மை தரும்.

34
செயல்திறனில் யார் முன்னிலை?

சேடக் 3001-ல் 3.2 kWh பேட்டரி உள்ளது. முழு சார்ஜில் சுமார் 127 கி.மீ ரேஞ்ச். சார்ஜ் ஆக 3.5 மணி நேரம் ஆகும். ஐக்யூப்-ல் 2.2 kWh பேட்டரி, ரேஞ்ச் 100 கி.மீ, சார்ஜிங் நேரம் 2.5 மணி மட்டுமே. நீண்ட பயணங்களுக்கு சேடக் சிறந்தது; தினசரி 20–40 கி.மீ பயணங்களுக்கு ஐக்யூப் வசதியானது. மோட்டார் பவரில், சேடக் 4.2 kW / 20 Nm, ஐக்யூப் 3 kW / 33 Nm டார்க் வழங்குகிறது. அதனால் pick-up-ல் iQube கையாளுதல் அதிகமாக இருக்கும்.

44
எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் அம்சங்கள்

அம்சங்களில் சேடக் 3001 டிஜிட்டல் கிளஸ்டர், ப்ளூடூத், OTA மேம்படுத்தல்கள், IP67 வாட்டர்ப்ரூஃப் பேட்டரி, ரிவர்ஸ் மோட் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. ஐக்யூப் 2.2 kWh பெரிய TFT டிஸ்ப்ளே, நேவிகேஷன், கால் அலர்ட், USB சார்ஜிங், சவாரி புள்ளிவிவரங்கள் போன்ற ஸ்மார்ட் அம்சங்கள்-களுடன் வருகிறது. மொத்தத்தில், கிளாசிக் லுக் – சேடக், டெக் லவர் – ஐக்யூப். பயணத் தேவையும், பட்ஜெட்டும் பார்த்து தேர்வு செய்தால் சரியான ஸ்கூட்டரை எளிதில் முடிவெடுக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories