Tata Punch EV: பெரியவர்கள், குழந்தைகள் பாதுகாப்பில் சிறந்த ஸ்கோர்.. டாடா பஞ்ச் இவி பாதுகாப்பு சூப்பர்

Published : Aug 01, 2026, 11:09 AM IST

Tata Punch EV: இந்தியாவின் சிறிய எலக்ட்ரிக் எஸ்யூவி சந்தையில் இடம் பிடித்துள்ள டாடா பஞ்ச் இவி பேஸ்லிப்ட், பாதுகாப்பிலும் தனது வலிமையை மீண்டும் நிரூபித்துள்ளது.

PREV
15
டாடா பஞ்ச் இவி ஃபேஸ்லிஃப்ட்

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பஞ்ச் இவி ஃபேஸ்லிஃப்ட் மாடல், சமீபத்தில் நடைபெற்ற பாரத் NCAP கிராஷ் டெஸ்டில் 5-ஸ்டார் பாதுகாப்பு மதிப்பீட்டில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. இந்த ரேட்டிங், டாப் வேரியண்டுக்கு மட்டுமல்ல, அனைத்து வேரியண்ட்டுகளும் பொருந்தும் என பாரத் NCAP க்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரியவர்கள் பாதுகாப்பு பிரிவில் பஞ்ச் இவி 32-க்கு 31.09 புள்ளிகள் பெற்றுள்ளது.

25
குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு

குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் 49-க்கு 45 புள்ளிகள் பெற்று சிறப்பான கலவை வெளிப்படுத்தியுள்ளது. இந்த மதிப்பெண்கள், முன்பக்க மற்றும் பக்கவாட்டு மோதல்களில் பயணிகளுக்கு கார் வழங்கும் பாதுகாப்புத் திறனை வெளிப்படுத்துகின்றன. முன்பக்க ஆஃப்செட் மோதல் சோதனையில் பஞ்ச் இவி 16-க்கு 15.28 புள்ளிகளும், பக்கவாட்டு மோதல் சோதனையில் 15.80 புள்ளிகளும் பெற்றுள்ளது.

மார்வெல் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்! டிவிஎஸ் ரைடர் டாக்டர் டூம் எடிஷன் விலை, அம்சங்கள் முழு விவரம்

35
குழந்தை கட்டுப்பாடு அமைப்பு

மேலும், Side Pole Impact Test-ஐயும் வெற்றிகரமாக கடந்துள்ளது. குழந்தைகள் பாதுகாப்பிலும் பஞ்ச் இவி சிறப்பாக செயல்பட்டுள்ளது. குழந்தை கட்டுப்பாடு அமைப்பு (CRS) சோதனை மற்றும் ISOFIX குழந்தை இருக்கை பொருத்துதல் தொடர்பான மதிப்பீடுகளிலும் இது உயர்ந்த மதிப்பெண்களைப் பெற்றுள்ளது. இதனால், குடும்பங்களுக்கான பாதுகாப்பான எலக்ட்ரிக் எஸ்யூவி என்ற இடத்தை பஞ்ச் இவி மேலும் வலுப்படுத்தியுள்ளது.

45
பாதுகாப்பு அம்சங்கள்

பாதுகாப்பு அம்சங்களைப் பொறுத்தவரை, எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), பக்கவாட்டு மற்றும் திரைச்சீலை ஏர்பேக்குகள், சீட் பெல்ட் நினைவூட்டல், ISOFIX சைல்ட் சீட் மவுண்ட்ஸ் மற்றும் பாதசாரிகள் பாதுகாப்பு அம்சங்கள் உள்ளிட்டவை அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டாண்டர்டாக வழங்கப்படுகின்றன. இதனால், கூடுதல் பாதுகாப்பு வசதிகளுக்காக உயர்ந்த வேரியண்ட்களைத் தேர்வு செய்ய வேண்டிய அவசியம் குறைகிறது.

55
எலக்ட்ரிக் எஸ்யூவி

2024-ல் சோதனை செய்யப்பட்ட பஞ்ச் இவி-யுடன் ஒப்பிடும்போது, ​​பெரியவர்கள் பாதுகாப்பு மதிப்பெண்ணில் சிறிய மாற்றம் இருந்தாலும், குழந்தைகள் பாதுகாப்பு மதிப்பெண்ணை தொடர்ந்து வலுவாகவே உள்ளது. மொத்தத்தில், டாடா பஞ்ச் இவி பேஸ்லிப்ட், இந்தியாவின் சிறிய எலக்ட்ரிக் எஸ்யூவி பிரிவில் பாதுகாப்பு அம்சங்களில் முன்னணி மாடல்களில் ஒன்றாக தனது இடத்தை உறுதிப்படுத்தியுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories