கார் மார்க்கெட்ல விற்பனையை அதிகரிக்கவும், புது மாடல்களுக்கு இடம் கொடுக்கவும்தான் கம்பெனிகள் இந்த மாதிரி ஆஃபர்களை கொடுக்குறாங்க. ஆனா, இந்த ஆஃபர்கள் எல்லா இடத்துலயும் ஒரே மாதிரி இருக்காது. ஸ்டாக் இருப்பு, டீலர்ஷிப் நிபந்தனைகளைப் பொறுத்து சலுகைகள்ல மாற்றம் இருக்கும்.
ஒரு முக்கியமான விஷயம், இங்கே சொல்லப்பட்டிருக்கிற தள்ளுபடிகள் பொதுவான தகவல்கள்தான். இந்த தள்ளுபடிகள் ஒவ்வொரு மாநிலம், நகரம், டீலர்ஷிப், ஸ்டாக், கலர், வேரியன்ட்னு எல்லாத்துக்கும் ஏத்த மாதிரி மாறும். அதாவது, இந்த தள்ளுபடி உங்க ஊர்ல இல்லனா டீலர்கிட்ட அதிகமாகவோ குறைவாகவோ இருக்கலாம். அதனால, ஒரு காரை வாங்குறதுக்கு முன்னாடி, சரியான தள்ளுபடி கணக்குகள் மற்றும் பிற தகவல்களுக்கு உங்க பக்கத்துல இருக்குற லோக்கல் டீலரை அணுகி கேட்டு தெரிஞ்சுக்கோங்க. கார் வாங்கப் போறவங்க, இந்த மாசம் ஒரு நல்ல டீலை பிடிக்கணும்னா, டீலர்கள்கிட்ட நேரடியா ஆஃபர் விவரங்களை கேட்கிறதுதான் சிறந்த வழி.