Interesting Facts: கார் கண்ணாடியில் கருப்புப் புள்ளிகள்.. வெறும் டிசைன் இல்ல.. சயின்ஸ் இருக்கு!

Published : Jul 09, 2026, 09:56 PM IST

Car Windshield: கார் கண்ணாடியின் ஓரத்தில் கருப்புப் புள்ளிகள் இருப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம். இதன் பின்னணியில் அறிவியல் உள்ளது. இது குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம். 

PREV
16
கார் கண்ணாடியில் கருப்புப் புள்ளிகள்.

நாம் எல்லாரும் கார் ஓட்டுகிறோம். ஆனால், கார் கண்ணாடியின் ஓரத்திலிருக்கும் சின்ன சின்ன கருப்புப் புள்ளிகள் எதற்கு என்று பல ஓட்டுநர்களுக்கு இன்னமும் தெரியாது. இது வெறும் டிசைன் என்று நினைத்தால் அது தவறு. காரின் பாதுகாப்பில் இந்த கருப்புப் புள்ளிகளுக்கு முக்கிய பங்கு இருக்கிறது.

26
இது வெறும் புள்ளி இல்ல, ஸ்பெஷல் 'ஃபிரிட்ஸ்' (Frits)

கார் கண்ணாடியின் ஓரங்களில் தெரியும் இந்த கருப்புப் புள்ளிகள் வெறும் அழகுக்காக வைக்கப்பட்டது இல்லை. இது வாகனப் பாதுகாப்பின் ஒரு முக்கிய அம்சம். அறிவியல் மொழியில், இந்தப் புள்ளிகளை 'ஃபிரிட்ஸ்' (Frits) என்று சொல்கிறார்கள். இதை ஒரு சிறப்பு செராமிக் பெயிண்ட் (Ceramic Paint) கொண்டு, விண்ட்ஷீல்டின் ஓரங்களில் ஒரு குறிப்பிட்ட முறையில் பூசுகிறார்கள்.

36
கண்ணாடிக்கும் ஃபிரேமுக்கும் கிரிப் (Strong Grip)

இந்த 'ஃபிரிட்ஸ்' (கருப்புப் புள்ளிகள்), காரின் முதன்மை ஃபிரேமையும் கண்ணாடியையும் ஒட்டவைக்கப் பயன்படுத்தும் பசைக்கு (Glue) ஒரு வலுவான பிடிப்பைக் கொடுக்கிறது. இதனால், விபத்து நடக்கும்போதோ, மேடு பள்ளங்களில் கார் ஏறி இறங்கும்போதோ, கண்ணாடி எளிதில் பெயர்ந்து வராது. காரின் பாடியுடன் கண்ணாடி கச்சிதமாக ஒட்டிக்கொள்ள இதுதான் காரணம்.

46
கண்ணாடி விரிசல் விடுவதை தடுக்கும் (Heat Distribution)

இந்தக் கருப்புப் புள்ளிகள், கண்ணாடியின் மீது விழும் சூரிய வெப்பத்தை சமமாகப் பரவச் செய்கிறது. ஒருவேளை இந்தப் புள்ளிகள் இல்லை என்றால், கடுமையான வெயிலால் கண்ணாடியின் ஓரங்களில் அதிக அழுத்தம் (Thermal Stress) உருவாகி, விண்ட்ஷீல்டில் விரிசல் விழும் அல்லது உடையும் அபாயம் இருக்கிறது. இந்த புள்ளிகள் வெப்பத்தைக் கட்டுப்படுத்தி கண்ணாடியின் ஆயுளை அதிகரிக்கிறது.

56
டிரைவர் கண்ணுக்கு பாதுகாப்பு மற்றும் டிசைன்

விண்ட்ஷீல்டின் ஓரத்திலிருந்து உள்பக்கமாகப் பார்த்தால், இந்த கருப்புப் புள்ளிகள் படிப்படியாகக் குறைந்துகொண்டே போவது போல் வடிவமைப்பு செய்திருப்பார்கள். இது சூரியனின் நேரடிக் கதிர்கள் காருக்குள் வருவதைத் தடுக்கும். இதனால், ஓட்டுநரின் கண்கள் கூசாமல் இருக்கும். அதோடு, கண்ணாடியை ஒட்டப் பயன்படுத்திய பசை வெளியே தெரியாமல் மறைத்து, காருக்கு ஒரு பிரீமியம் தோற்றத்தையும் கொடுக்கிறது.

66
நிபுணர் ஆலோசனை மற்றும் பராமரிப்பு

இந்தக் கருப்புப் புள்ளிகளை ஒரு சாதாரண டிசைன் என்று நினைத்து அலட்சியமாக இருக்கக் கூடாது. இது வாகனத்தின் பாதுகாப்பு, ஆயுள் மற்றும் விண்ட்ஷீல்டின் உழைப்பை அதிகரிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. நாளாக நாளாக இந்தப் புள்ளிகள் தேய்ந்துபோனாலோ, மங்கிப் போனாலோ, உடனே ஒரு மெக்கானிக்கிடம் காட்டி சரிசெய்வதுதான் பாதுகாப்புக்கு நல்லது.

Read more Photos on
click me!

Recommended Stories