ஒரே மாசத்துல 3,770 யூனிட்ஸ் விற்பனை.. டாடா காருன்னா சும்மாவா.. எல்லாம் ஜிஎஸ்டி புண்ணியம்

Published : Nov 23, 2025, 08:24 AM IST

அக்டோபர் 2025-இல் 3,770 யூனிட்கள் விற்று 43% விற்பனை வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது இந்த டாடா நிறுவன கார். இதன் 5-நட்சத்திர பாதுகாப்பு, அம்சங்கள், போட்டி விலை போன்றவை இதன் வெற்றிக்கு முக்கிய காரணங்களாகும்.

PREV
14
அதிகம் விற்பனையாகும் டாடா கார்

இந்திய சந்தையில் பிரீமியம் ஹேட்ச்பேக் கார்களின் போட்டி எப்போதும் சூடாகவே இருக்கும். மாருதி சுசூகி பலேனோவும், ஹூண்டாய் i20யும் முன்னணியில் இருந்தாலும், டாடா ஆல்ட்ரோஸ் கடந்த மாதங்களில் விற்பனையில் தொடர்ந்து நிலைபெற்றுள்ளது. பாதுகாப்பு, அம்சங்கள், விலை சமநிலை மற்றும் வடிவமைப்பு காரணமாக, பலர் இந்த மாதலை விரும்பி வாங்கி வருகின்றனர். அதனால் தான், அக்டோபர் 2025 மாதத்தில் மட்டும் 3,770 யூனிட்கள் விற்று, ஆல்ட்ரோஸ் தனது விற்பனை திறனை மீண்டும் நிரூபித்துள்ளது.

24
டாடா ஆல்ட்ரோஸ் விற்பனை

கடந்த ஆண்டு அதே மாதமான அக்டோபர் 2024-இல் இந்த காரின் விற்பனை 2,642 யூனிட்களாக இருந்தது. இதற்குப் பதிலாக இவ்வாண்டு 1,128 யூனிட்கள் கூடுதலாக விற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஒரு ஆண்டில் ஆல்ட்ரோஸ் 43% வளர்ச்சி கண்டுள்ளது என்பது மிகப்பெரிய சாதனை. கடுமையான போட்டி இருந்தாலும், இந்த வளர்ச்சி டாடா நிறுவனத்தின் தரம், (5-நட்சத்திர மதிப்பீடு), மற்றும் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையின் விளைவாகும்.

34
டாடா ஆல்ட்ரோஸ் விலை

டாடா ஆல்ட்ரோஸ் தற்போது இந்தியாவில் மிகவும் ஈர்க்கும் விலையில் கிடைக்கிறது. ஆரம்ப வேரியன்ட் ரூ.6.30 லட்சத்திலிருந்து தொடங்குகிறது. மேலும், டாப் வேரியன்ட் ரூ.10.51 லட்சம் மட்டுமே. ஜிஎஸ்டி குறைப்பு, அதிகபட்சம் ரூ.1.12 லட்சம் வரை தள்ளுபடியும் விற்பனையை மேலும் தூண்டியுள்ளது. வாடிக்கையாளர்கள் குறைந்த விலையில் பிரீமியம் ஹேட்ச்பேக் பெறுவதால், ஆல்ட்ரோஸ் மீது விருப்பம் பெருகியுள்ளது.

44
டாடா ஆல்ட்ரோஸ் அம்சங்கள்

அம்சங்களோடு சேர்த்து, ஆல்ட்ரோஸ் வழங்கும் எஞ்சின் ஆப்ஷன்களும் இதை தனித்துவப்படுத்துகின்றன. 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் 88 PS பவர் மற்றும் 115 Nm டார்க் வழங்குகிறது. இது 5-ஸ்பீடு மேனுவல், 5-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் மற்றும் 6-ஸ்பீடு DCT கியர்பாக்ஸ்களுடன் கிடைக்கிறது. மேலும், சிஎன்ஜி விரும்புவோருக்கான 1.2 லிட்டர் பை-பியூல் இன்ஜின் 73.5 PS பவர் வழங்குகிறது. மேலும், டீசல் விரும்புவோருக்கு 1.5 லிட்டர் இன்ஜின் 90 PS மற்றும் 200 Nm டார்க் வழங்குகிறது. மாடல் வசதிபட 19–26 kmpl வரை மைலேஜ் கிடைக்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories