ரூ.2.10 லட்சம் தள்ளுபடி.. வோல்க்ஸ்வேகன் கார்களில் பெரிய சலுகை.. உடனே முந்துங்க

Published : Aug 16, 2025, 07:18 PM IST

ஃபோக்ஸ்வேகன் இந்தியா அதன் பிரபலமான டிகுவான் மற்றும் விர்டஸ் மாடல்களில் கணிசமான தள்ளுபடியை வழங்குகிறது. இது புதிய கார் வாங்க விரும்புவோருக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாக அமைகிறது.

PREV
15
வோல்க்ஸ்வேகன் பண்டிகை சலுகைகள்

தற்போது பண்டிகை காலம் தொடங்கிவிட்டது என்பதால், கார் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சிறப்பு சலுகைகளை அறிவித்து வருகின்றன. அதில் வோல்க்ஸ்வேகன் இந்தியா தற்போது தனது பிரபலமான மாடல்களுக்கு பெரிய தள்ளுபடியை அறிவித்துள்ளது. கார் வாங்க ஆசைப்பட்டு காத்திருக்கிறவர்களுக்கு இது ஒரு தங்க வாய்ப்பாக இருக்கிறது. குறிப்பாக விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்த சலுகை பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

25
ரூ.2.10 லட்சம் தள்ளுபடி

வோல்க்ஸ்வேகன் நிறுவனம் தனது பிரபலமான SUV மாடலான Volkswagen Tiguan மீது ரூ.2.10 லட்சம் வரை தள்ளுபடி வழங்குகிறது. இதேபோல், Volkswagen Virtus மாடலுக்கு ரூ.1.75 லட்சம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஆனால், இந்த சலுகை உங்கள் பகுதியில் உள்ள டீலர்ஷிப் மற்றும் இடத்தைப் பொறுத்து மாறுபடும் என்பதால், அருகிலுள்ள வோல்க்ஸ்வேகன் ஷோரூமில் தொடர்பு கொண்டு உறுதிசெய்வது நல்லது.

35
என்ஜின் மற்றும் அம்சங்கள்

வோல்க்ஸ்வேகன் (Volkswagen) Tiguan இரண்டு பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களுடன் வருகிறது. 1.0 லிட்டர் TSI மற்றும் 1.5 லிட்டர் TSI. 1.0 லிட்டர் என்ஜின் 115 bhp பவரையும் 178 Nm டார்க்கையும் வழங்கும். 1.5 லிட்டர் என்ஜின் 150 bhp பவர் மற்றும் 250 Nm டார்க் உற்பத்தி செய்கிறது. இதற்கு 4 MOTION ஆல்-வீல் டிரைவ் மற்றும் Dynamic Chassis Control வசதியும் உள்ளது. பாதுகாப்பு அம்சங்களாக 6 ஏர்பேக், ABS உடன் EBD, ரிவர்ஸ் பார்கிங் சென்சார், நிலை 2 ADAS ஆகியவையும் தரப்பட்டுள்ளன. மேலும், பனோரமிக் சன்ரூஃப், 10.25 இஞ்ச் டிஜிட்டல் கிளஸ்டர், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ/ஆப்பிள் கார்பிலே வசதிகளும் உள்ளன.

45
வோல்க்ஸ்வேகன் விர்டஸ்

வோல்க்ஸ்வேகன் விர்டஸ் (Volkswagen Virtus)-ல் 1.0 லிட்டர் மற்றும் 1.5 லிட்டர் TSI பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்கள் தரப்பட்டுள்ளன. ஹைவேத்திற்கான ஓட்ட ஸ்டபிலிட்டி மற்றும் ஸ்மூத் டிரைவிங்கில் இந்த செடான் பிரபலமானது. இதன் அம்சங்களில் LED ஹெட்லைட்கள், LED DRLகள், பிளாக் ஃப்ரண்ட் கிரில், 16-இஞ்ச் அலாய் வீல்கள், எலக்ட்ரிக் சன்ரூஃப், கீலெஸ் என்ட்ரி, ஸ்டார்ட்/ஸ்டாப் பட்டன், 20.32 செ.மீ டிஜிட்டல் காக்பிட் மற்றும் 25.65 செ.மீ இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவை அடங்கும்.

55
கேபின் மற்றும் வசதிகள்

Virtus காரின் கேபின் ப்ரீமியம் டச் கொண்டதாக உள்ளது. இதில் பிளாக் டாஷ்போர்டு, ரெட் அம்பியன்ட் லைட்ஸ், அலுமினியம் பெடல்ஸ், கிரே ஸ்டிச்சிங் கொண்ட பிளாக் லெதரெட் சீட்டுகள் உள்ளன. அதோடு ஆண்ட்ராய்டு ஆட்டோ/ஆப்பிள் கார்ப்ளே, வயர்லெஸ் சார்ஜர், டயர் பிரஷர் மானிட்டர், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், வென்டிலேட்டட் சீட்டுகள், சன்ரூஃப், பார்க்கிங் சென்சார்கள் போன்றவை தரப்பட்டுள்ளன.

Read more Photos on
click me!

Recommended Stories