ஒரே சார்ஜில் 320 கிமீ செல்லும் ஓலா S1 Pro Sport.. ஸ்கூட்டர் விலை எவ்வளவு?

Published : Aug 16, 2025, 04:20 PM IST

ஓலா S1 Pro Sport புதிய 4680 பேட்டரி தொழில்நுட்பம், மேம்பட்ட வடிவமைப்பு மற்றும் ADAS வசதியுடன் அறிமுகமாகியுள்ளது. 16 kW மின்மோட்டார், 152 kmph வேகம் மற்றும் 320 கிமீ ரேஞ்ச் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

PREV
15
ஓலா எஸ்1 ப்ரோ ஸ்போர்ட்

இந்தியாவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஓலா எஸ்1 ப்ரோ ஸ்போர்ட் (Ola S1 Pro Sport) அறிமுகமாகியுள்ளது. ஆரம்ப விலை ரூ.1.50 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதிய மாடல், வடிவமைப்பில் மேம்படுத்தப்பட்டது, புதிய 4680 வகை பேட்டரி தொழில்நுட்பத்துடன் வந்துள்ளது. இது வேகமான சார்ஜ் நேரம், அதிக சக்தி அடர்த்தி மற்றும் குறைந்த உற்பத்தி செலவை வழங்கும் நிறுவனம் கூறுகிறது.

25
ஓலா ஸ்போர்ட் ஸ்கூட்டர் அம்சங்கள்

புதிய மாடலில் பல மாற்றங்களைக் கொண்டுள்ளது. ஸ்கூட்டரின் முன்புற அப்பிரான் (apron) பகுதியில் லோகோ மையத்தில் வைக்கப்பட்டுள்ளது. அதற்கு கீழே கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ADAS வசதி (மோதல் கண்டறிதல் போன்ற அம்சங்கள்) செயல்படும். இதனை ஆதரிக்கும் MoveOS 6 எனும் புதிய மென்பொருள் வழங்கப்பட்டுள்ளது.

35
ஓலா புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்

கூடுதலாக, புதிய இருக்கை வடிவமைப்பு, கார்பன் ஃபைபர் முன் ஃபெண்டர், ஈரோ விண்ட்ஷீல்டு, கார்பன் ஃபைபர் கிராப் ஹாண்டில் ஆகியவையும் சேர்க்கப்பட்டுள்ளன. 14 இன்ச் சக்கரங்களும் இதில் பொருத்தப்பட்டுள்ளன. இத்துடன், ஓலா நிறுவனம் இந்தியாவில் தயாரித்துள்ள தனித்துவமான Ferrite electric motor இந்த ஸ்கூட்டரில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

45
ஓலா S1 Pro Sport ரேஞ்ச்

இது அதிகபட்சமாக 16 kW பவர் மற்றும் 71 Nm டார்க் உற்பத்தி செய்கிறது. முக்கியமாக, இதன் வடிவமைப்பு வெளிநாட்டு ‘அபூர்வ பூமி’ எலிமெண்ட்களிடம் சார்ந்திராமல் தயாரிக்கப்பட்டுள்ளது சிறப்பு ஆகும். பேட்டரி திறன் 5.2 kWh ஆகும். புதிய 4680 செல் தொழில்நுட்பத்துடன் இணைந்திருப்பதால், ஸ்கூட்டர் அதிகபட்ச வேகம் 152 kmph வரை செல்லும். 0-40 kmph வேகத்தை வெறும் 2 வினாடிகளில் எட்டக்கூடும்.

55
ஓலா ஸ்கூட்டர் பேட்டரி

ஒரே சார்ஜில் அதிகபட்ச 320 கிமீ வரை IDC ரெஞ்ச் கிடைக்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. மொத்தத்தில், மேம்பட்ட பேட்டரி, சக்திவாய்ந்த மின்மோட்டார், புதிய டிசைன் மற்றும் உயர் தொழில்நுட்ப அம்சங்களுடன் வந்துள்ளதால், ஓலா S1 Pro Sport இந்தியாவில் எலக்ட்ரிக் வாகன சந்தையில் வாடிக்கையாளர்களை கவரும் மாடலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories