கம்பீரமான ராயல் என்பீல்ட் ஹிமாலயன் 450.. ஸ்டைலான KTM 390 Adventure - இரண்டில் எது சிறந்தது? ஒரு ஒப்பீடு!

First Published | Nov 27, 2023, 1:31 PM IST

Royal Enfield Vs KTM : உலக அளவில் புகழ் பெற்ற ராயல் என்ஃபீல்டு நிறுவனம் இவ்வாண்டு (2023) துவக்கத்தில் தங்களுடைய புதிய ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 450 பைக்கை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

Royal Enfield vs KTM

இந்நிலையில் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வரும் ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 450 பைக் மற்றும் கேடிஎம் நிறுவனத்தின் 390 அட்வென்ச்சர் பைக்கின் ஒப்பீடு பற்றி காணலாம்.

Royal Enfield Himalayan 450 vs KTM 390 Adventure அம்சங்கள் ஒரு ஒப்பீடு

ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 450 பைக்கில் முகப்பு விளக்குகள் எல்இடி கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. புதிய மாடல் பின்புற விளக்குகளும், சமிக்கை விலக்குகளும் பொருத்தப்பட்டு இருக்கும் இந்த வண்டியில் நான்கு இன்ச் TFT டிஸ்ப்ளே உள்ளது. ஓட்டுநர்கள் தங்கள் ஸ்மார்ட் போனுடன் அதை ஒன்றிணைத்து விட்டால் மேப், மீடியா மற்றும் எஸ்எம்எஸ் உள்ளிட்ட பல விஷயங்களை அதன் மூலம் இயக்கிக் கொள்ளலாம். இதில் மாற்றிக் கொள்ளும் வகையில் ஏபிஎஸ் தொழில்நுட்பம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

KTM 390 அட்வென்சர் பைக்களிலும் அதே LED முகப்பு விளக்குகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் இதில் கூடுதலாக அட்ஜஸ்டபிள் விண்ட்சீல்டு, கலர் TFT டிஸ்ப்ளே அமைக்கப்பட்டுள்ளது. ஓட்டுநர்கள் தங்கள் ஸ்மார்ட் போனுடன் இணைத்துக் கொள்வது மட்டுமல்லாமல், சார்ஜராகவும் பயன்படுத்திக்கொள்ள முடியும். இந்த வாகனத்தில் இரண்டு Modeளில் ஓட்டுனர்கள் தங்கள் பயணத்தை மேற்கொள்ளலாம். குறிப்பாக ஓட்டுனர்கள் ஆப்-ரோடு செல்லும் பொழுது அதற்கென்று பிரத்தியேகமாக Driving Mode உள்ளது. ஏபிஎஸ், ட்ராக்சன் கண்ட்ரோல், பை-டைரக்ஷனல் குயிக் ஷிப்ட் மற்றும் பல சிறப்பு அம்சங்கள் இதில் அமைக்கப்பட்டுள்ளது.

அடுத்த வருடம் நாமதான்.. வாகன சந்தையில் டிவிஎஸ் ஏற்படுத்தப்போகும் புரட்சி.. வேற லெவல்..!

KTM 390 Adventure

Royal Enfield Himalayan 450 vs KTM 390 Adventure ஸ்பெக் ஒப்பீடு

ராயல் என்ஃபீல்டு 450 ஹிமாலயன் பைக் 452 சிசி சிங்கிள் சிலிண்டர் லிக்விட் கூல்ட் என்ஜினுடன் வருகிறது. இதில் 6 பீட் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ள நிலையில், இதில் ஸ்லிப் அண்ட் அஸ்சிஸ்ட் முறை கிளட்ச்  பயன்படுத்தப்படுகிறது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னதாக வெளியான ஹிமாலயன் மாடல் பைக்கை விட இதில் சுமார் 15.4 bhp கூடுதல் திறன் மற்றும் 8Nm கூடுதல் டார்க் வெளியேற்றம் உள்ளது.

அதே சமயத்தில் புதிய KTM 390 அட்வென்ச்சர் பைக்கில் அதே பழைய 373.2 சிசி சிங்கிள் சிலிண்டர் லிக்விட் கூல் என்ஜின் உள்ளது. இதனால் 43 bhp என்கின்ற அளவில் சக்தியை வெளிப்படுத்த முடியும். அதேபோல இந்த பைக்கிலும் குயிக் ஷிப்ட்டர் மற்றும் ஸ்லிப் அண்ட் அசிஸ்ட் கிளட்ச் முறை செயல்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tap to resize

Royal Enfield 450 Himalayan

Royal Enfield Himalayan 450 vs KTM 390 Adventure விலை ஒப்பீடு

ராயல் என்பீல்டு ஹிமாலயன் 450 பைக் ஆனது Base, Pass மற்றும் Summit என்று மூன்று வெவ்வேறு வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது. இதில் Base மாடல் 2.69 லட்சத்திற்கும், இடைப்பட்ட வகையான Pass வேரியன்ட் சுமார் 2.74 லட்சத்திற்கும், டாப் மாடலான Summit சுமார் 2.84 லட்சத்திற்கும் விற்பனையாகிறது. எல்லாமே Ex-Show room விலையாகும்.

அதேபோல ராயல் என்பீல்டு பைக்கோட ஒப்பிடும்போது KTM 390 அட்வென்சர் பைக் சற்று விலை உயர்ந்த வாகனமாகவே பார்க்கப்படுகிறது. அலாய் சக்கரங்களோடு வரும் KTM 390 அட்வென்சர் பைக் சுமார் 3.39 லட்சத்திற்கும், ஸ்போக்ஸ் சக்கரங்களோடு வரும் வண்டிகள் சுமார் 3.61 லட்சத்திற்கும் விற்பனை ஆகிறது குறிப்பிடத்தக்கது. 

ஏசியாநெட் தமிழ் செய்திகளைஉடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Latest Videos

click me!