ராயல் என்பீல்ட் நிறுவனம் வெளியிட்ட திடீர் அறிக்கை.. என்ன இப்படி சொல்லிட்டீங்க - பயங்கர சோகத்தில் இளசுகள்!

First Published Nov 28, 2023, 10:55 AM IST

Royal Enfield : சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ராயல் என்பீல்டு நிறுவனம், கடந்த 1955 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் தனது பைக்குகளை விற்பனை செய்து வருகின்றது.

Bullet 350 1955

புல்லட் 350, இது தான் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் முதல் முதலில் இந்தியாவில் அறிமுகம் செய்த பைக் ஆகும். இன்றளவும் இளசுகளில் இருந்து பெரியவர்கள் வரை பலர் மத்தியில் ஏகோபித்த ஆதரவோடு விற்பனை ஆகி வரும் ஒரு பைக் தான் ராயல் என்பீல்ட் என்பது அனைவரும் அறிந்ததே.

வேற லெவல் ரேஞ்ச் கொடுக்கும் ஹூண்டாய் ஐயோனிக் 5 கார்! ஆயிரத்தைத் தாண்டிய புக்கிங் எண்ணிக்கை!

Royal Enfield Hunter

குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்திலும் சரி, இந்திய அளவிலும் சரி ராயல் என்பீல்டு பைக்குகளின் விற்பனை பெரிய அளவில் அதிகரித்துள்ளது. ஆகையால் அந்த நிறுவனமும் பல்வேறு மாடல்களில் தங்களுடைய பைக்குகளை அறிமுகம் செய்து விற்பனை செய்து வருகிறது.

Latest Videos


Himalayan 450

அண்மையில் வெளியான ராயல் என்பீல்ட் ஹிமாலயன் 450 பைக் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக லடாக் போன்ற சவாலாக சாலைகளில் ட்ரிப் செல்லும் பலரும், இந்த பைக்குகளை பயன்படுத்துவதில் ஆர்வம்காட்டி வருகின்றனர். இதன் விலை சுமார் 2.5 லட்சம் ரூபாய் என்ற பொழுதும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

Himalayan 411

இந்த சூழ்நிலையில் தற்பொழுது ராயல் என்பீல்டு நிறுவனம் வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பு இலசுகளின் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுவரை சந்தையில் விற்பனையில் இருந்து வந்த ராயல் என்பீல்டு ஹிமாலயன் 411 என்கின்ற வாகனத்தை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விற்பனையிலிருந்து நிறுத்துவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அதற்கு மாற்றாக ஹிமாலயன் 452 களமிறங்க உள்ளது என்றும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது. ஹிமாலயன் 411 சுமார் 2.3 லட்சத்திற்கு விற்பனையாகி வந்தது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளைஉடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

click me!