பார்க்கிங் கவலை கிடையாது.. Reverse Mode வசதியுடன் வரும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்..

Published : Dec 31, 2025, 02:50 PM IST

நகர்ப்புறங்களில் பார்க்கிங் செய்வதை எளிதாக்கும் 'Reverse Mode' வசதி கொண்ட எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் பிரபலமடைந்து வருகின்றன. இந்த வசதியுடன் வரும் ஸ்கூட்டர்களின் விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதில் விவரிக்கப்பட்டுள்ளன.

PREV
14
ரிவர்ஸ் பார்க்கிங் ஸ்கூட்டர்

இன்றைய நகர்ப்புற போக்குவரத்தில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் முக்கிய இடம் பிடித்துள்ளன. குறிப்பாக, குறுகிய இடங்களில் வாகனத்தை நகர்த்துவது, பார்க்கிங் செய்வது பலருக்கு சவாலாக உள்ளது. இந்த சிக்கலை எளிதாக்கும் முக்கிய அம்சமாக ‘Reverse Mode’ மாறியுள்ளது. இந்த வசதி இருப்பதால், ஸ்கூட்டரை பின்னோக்கி எளிதாக நகர்த்த முடியும். அதனால், தினசரி பயணம், வீடு அல்லது அலுவலகத்தில் பார்க்கிங் செய்வது மிகவும் வசதியாக உள்ளது. தற்போது இந்திய சந்தையில் Reverse Mode வசதியுடன் பல எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு வந்துள்ளன.

24
டிவிஎஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்

இந்த பட்டியலில் பிரபலமான ஒன்றாக டிவிஎஸ் ஐகியூப் (TVS iQube) உள்ளது. இதில் Reverse Parking Mode வழங்கப்பட்டுள்ளது. 2.2 kWh பேட்டரி கொண்ட ஆரம்ப நிலை மாடல், ஒரு முழு சார்ஜில் சுமார் 94 கிலோமீட்டர் பயணிக்கும் திறன் கொண்டது. இந்த ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1.07 லட்சம் முதல் தொடங்குகிறது. நகர்ப்புற பயணிகளுக்கு iQube ஒரு நம்பகமான தேர்வாக பார்க்கப்படுகிறது.

34
ஹீரோ விடா

ஹீரோ விடா வரிசையில் உள்ள VX2 Go மாடல், 2.2 kWh பேட்டரியுடன் வரும் குறைந்த விலை மாடலாகும். IDC தரவுகளின்படி, இது ஒரு சார்ஜில் 92 கிலோமீட்டர் வரை பயணிக்கும் திறன் கொண்டது. இதில் Reverse Mode வசதி இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஸ்கூட்டரின் ஆரம்ப விலை ரூ.74,000 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், ஓலா நிறுவனத்தின் S1 X (2 kWh) மாடலும் Reverse Mode வசதியுடன் வருகிறது. இது IDC கணக்கில் 108 கிலோமீட்டர் ரேஞ்ச் வழங்குகிறது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.80,499 ஆகும்.

44
பஜாஜ் சேடக்

பஜாஜ் சேடக் வரிசையில் உள்ள 3001 மாடல், 3 kWh பேட்டரியுடன் வருகிறது. நிறுவனம் கூறுவதன்படி, இந்த ஸ்கூட்டர் ஒரு சார்ஜில் அதிகபட்சம் 127 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டது. Reverse Mode வசதியும் இதில் வழங்கப்பட்டுள்ளது. இந்த மாடலின் ஆரம்ப விலை ரூ.99,500 (எக்ஸ்-ஷோரூம்). Reverse Mode, நல்ல ரேஞ்ச் மற்றும் போட்டி விலை ஆகிய அம்சங்களால், இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் பயனர்களின் கவனத்தை அதிகமாக ஈர்த்து வருகின்றன.

Read more Photos on
click me!

Recommended Stories