என்ஜின் மற்றும் மைலேஜ் பற்றி பார்க்கையில், இரண்டு மாடல்களும் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜினுடன், தொழிற்சாலையில் பொருத்தப்பட்ட CNG அமைப்புடன் வருகின்றன. பிரைம் எஸ்டி மாடல் 28.40 கிமீ/கிலோ சிஎன்ஜி மைலேஜையும், பிரைம் எச்பி மாடல் 27.32 கிமீ/கிலோ மைலேஜையும் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓட்டச் செலவு ஒரு கிலோமீட்டருக்கு 47 பைசா வரை குறையலாம் என ஹூண்டாய் தெரிவித்தார். கூடுதலாக, 4 மற்றும் 5வது ஆண்டுகளுக்கு அல்லது 1.8 லட்சம் கிமீ வரை விரிவான வாரண்டியும் வழங்கப்படுகிறது.
அம்சங்களைப் பார்க்கும்போது, ஆறு ஏர்பேக்குகள், ரியர் ஈசி வென்ட்ஸ், ஸ்ரைரிங் வீல் கட்டுப்பாடுகள், டைப்-சி யுஎஸ்பி சார்ஜர், முன் மற்றும் பின் பவர் விண்டோக்கள், ரியர் பார்கிங் சென்சார்கள் போன்ற பாதுகாப்பு மற்றும் வசதிகள் வழங்கப்படுகின்றன. விருப்பமாக 9-இஞ்ச் டச் ஸ்கிரீன், வயர்லெஸ் Apple CarPlay, Android Auto, ரியர் கேமரா, வாகன கண்காணிப்பு சாதனம் போன்ற வசதிகள் கிடைக்கின்றன.